இஷ்டத்துக்கு உளறும் விஷால்.. பேராசையால் பெயரை கெடுத்துக்கொள்ளாமல் இருந்தால் சரி

நடிகர் விஷால் லத்தி திரைப்படத்தை தொடர்ந்து தற்போது மார்க் ஆண்டனி என்னும் திரைப்படத்தின் நடித்து வருகிறார். இது விஷாலுக்கு 33ஆவது படமாகும். இந்தப் படத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஐந்து மொழிகளில் இந்தியா படமாக ரிலீஸ் ஆக இருக்கிறது.

உதவி இயக்குனராக இருந்த விஷால், செல்லமே திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பின்னர் சண்டக்கோழி, திமிரு போன்று அடுத்தடுத்து அதிரடி ஆக்சன் படங்கள் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். ஆக்சன் திரைப்படங்களில் நடித்ததனால் இவருக்கு புரட்சித்தளபதி என்ற பெயரும் கூட வந்தது.

அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து முன்னணி ஹீரோவாக முன்னேறிக்கொண்டிருந்த விஷாலுக்கு கடந்த சில வருடங்களாக வெற்றி படங்கள் என்ற ஒன்று அமையவே இல்லை. இதற்கிடையில் இவர் நடிகர் சங்க பிரச்சனைகளில் அதிக கவனமும் செலுத்த ஆரம்பித்தார். மேலும் இவருக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் வேறு நின்றது.

ஓரளவுக்கு முன்னேறிக் கொண்டிருந்த விஷால் அப்படியே பின்னடைவு அடைந்து விட்டார். இதற்கு அவருடைய தேவை இல்லாத பேச்சுக்களும், ஈகோவும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது . மேலும் நடிகர் சங்க தேர்தலில் ஜெயித்ததால் இவருக்கு அரசியல் ஆசையும் கொஞ்சம் தொற்றிக் கொண்டது.

சமீபத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்திற்காக புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் முகத்தை தன் மார்பில் பச்சை குத்திக்கொண்டார். இது பற்றி பேசியபோது இந்தியாவிலேயே நான் மட்டும்தான் எம்ஜிஆரின் ரசிகன் என்று ஏதேதோ உளறித் தள்ளினார். இதுபோன்று பல நேரங்களில் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்.

தொடர் தோல்வி படங்களை கொடுத்ததால் இவருக்கு கைவசம் எந்த படங்களுமே இல்லை. ஆனால் கைகளில் ஏதோ நிறைய பட வாய்ப்புகள் இருப்பது போல் மேடைகளில் பேசி வருகிறார். தேடி வரும் வாய்ப்புகளையும் ஓவராக பேசி கெடுத்து கொள்கிறார்.அரசியல் ஆசையால் இவர் தேவை இல்லாமல் பேசி தன் பெயரை கெடுத்துக் கொள்ளாமல் இருந்தால் சரி.