லோகேஷ் பட வில்லனா செத்திடுவாங்கன்னு தெரிஞ்சு, நடிக்க ஆசைப்படும் 4 ஹீரோக்கள்.. ஆசை யாரை விட்டுச்சு!

Lokesh Kanagaraj: தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் வில்லன் கேரக்டர் என்றால் நடிகர்கள் நடிக்க ரொம்பவே யோசிப்பார்கள். ஹீரோவாக நடிக்க வந்துவிட்டு தோற்றம் மற்றும் உடல் பாவனைகளால் வில்லனாக நடித்த நடிகர்களும் நிறைய பேர் உண்டு. அதே போல் ஆரம்பத்தில் வில்லன் கேரக்டரில் நடித்துக் கொண்டு இருந்தாலும், அவர்களுடைய ஒரே குறிக்கோள் அடுத்து ஹீரோ ஆக வேண்டும் என்பதாகத்தான் இருந்தது.

ஆனால் தற்போது இந்த நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. ஒரு படத்தில் ஹீரோவை விட, வில்லன் கேரக்டர் ரசிகர்களால் ரொம்ப கொண்டாடப்படுகிறது. இதனாலேயே இயக்குனர்கள் அவர்களின் படங்களில் வில்லன் கேரக்டர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது போல் கதை அமைக்கிறார்கள். இந்த ட்ரெண்ட்டை வளர்த்து விட்டது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான். தற்போது இந்த நான்கு நடிகர்கள் நடித்தால் லோகேஷ் படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என ரொம்பவும் ஆசைப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.

அப்பாஸ்: நடிகர் அப்பாஸ் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தவர். அதன்பின்னர் கதைகளை தேர்ந்தெடுப்பதில் கொஞ்சம் சொதப்பியதால் மொத்தமாக மார்க்கெட் இல்லாமல் போய்விட்டார். தற்போது வெளிநாட்டில் செட்டில் ஆகி இருக்கும் இவர் இந்தியா திரும்பியதும் கொடுத்த பேட்டியில் லோகேஷ் கனகராஜ் படத்தில் வில்லனாக நடிக்க தனக்கு ஆசை இருப்பதாக சொல்லி இருக்கிறார்.

கணேஷ் வெங்கடராமன்: நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் நிறைய படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி இவருக்கு மக்களிடையே அறிமுகத்தை ஏற்படுத்தியது என்று கூட சொல்லலாம். தனி ஒருவன் படத்தில் இவருடைய நடிப்பு கவனிக்கத்தக்கதாக இருந்தது. கணேஷ் வெங்கட்ராமனும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார்.

பாபி சிம்ஹா: நடிகர் பாபி சிம்ஹா எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக நடிக்க கூடியவர். ஜிகர்தண்டா படத்தில் வில்லனாக அசத்தி இருப்பார். அதேபோல் இறைவி படத்திலும் இவருடைய நெகட்டிவ் ரோல் அதிக கவனத்தைப் பெற்றது. தற்போது பாபி சிம்ஹா அவ்வளவாக படங்களில் நடிப்பது இல்லை என்றாலும், இவருக்கு லோகேஷ் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது விருப்பம்.

ஆதி: நடிகர் ஆதி நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கக்கூடிய ஹீரோ. இவருடைய நடிப்பில் மரகத நாணயம் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. சமீபத்தில் கூட இந்த படத்தின் இரண்டாம் பாகம் ரெடியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின. ஆதி சாக்லேட் பாய் ஹீரோவாக இருந்தாலும் அவருக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என விருப்பப்படுவதாக சொல்லி இருக்கிறார்.