சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு கூட வேறு ஒரு நடிகர் போட்டி போட்டு வந்துவிடலாம். ஆனால் உலக நாயகன் பட்டத்திற்கு யாரும் நெருங்க முடியாத அளவிற்கு தற்போது மிகப்பெரிய உயரத்தில் வளர்ந்து நிற்கிறார். இவர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்றே சொல்லலாம். இவருடைய மிகப்பெரிய சிறப்பே ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக தோற்றத்தை மாற்றிக் கொண்டு கதைகளையும் வேறொரு கோணத்தில் கொண்டு போவது தான்.
அப்படிப்பட்ட இவர் மலையாளம், இந்தி, கன்னடம் மற்றும் பெங்காலி போன்ற மொழிகளிலும் நடித்திருக்கிறார். ஆனால் இவர் ஆரம்ப காலத்தில் மற்ற மொழி படங்களில் நடிப்பதற்கு பல அவமானங்களை சந்தித்திருக்கிறார். அதாவது ஹிந்தியில் நடித்த முதல் படம் ஏக் தூஜே கேலியே இப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக ஹிட்டானது. இதனால் அங்குள்ள ரசிகர்கள் இவரை கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். இதனை அடுத்து தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி இருந்த நிலையில் அந்த படங்களில் நடிப்பதற்கு பல தடைகள் வந்திருக்கிறது.
அதற்கு காரணம் இவர் ஹிந்தியில் தொடர்ந்து நடித்தால் கூடிய சீக்கிரத்தில் வளர்ந்து விடுவார் என்பதற்காக இவர் வளர்ச்சியை தடுத்திருக்கிறார்கள். அதாவது இந்த மாதிரி வேலைகளை செய்தவர் 80, 90களில் அங்கு சூப்பர் ஸ்டாராக இருந்த முக்கிய ஹீரோக்கள். இவரை வளர விட்டால் நமக்கு இடம் இருக்காது என்ற பயத்தில் சில மட்டமான வேலைகளை செய்திருக்கிறார்கள்.
அத்துடன் இவர் வேற எந்த படத்திலும் நடிக்க வைக்க கூடாது என்று முக்கிய இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் கட்டளை போட்டிருக்கிறார்கள். அவர்களும் வேறு வழியில்லாமல் இவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு எந்த படத்திலும் நடிக்க கூப்பிட மாட்டார்களாம். அதையும் மீறி ஒரு சில படங்களில் வாய்ப்பு கிடைத்து நடித்தால் அவர்களால் பொறுத்துக் கொள்ளவே முடியாத அளவிற்கு கோபத்தின் உச்சத்தில் இருப்பார்களாம்.
அப்படி சில படங்களில் நடித்து வெற்றி பெற்ற பிறகு அதற்கான நிகழ்ச்சியில் மேடை ஏறி பேசும் பொழுது கல் மற்றும் முட்டைகளை வைத்து தூக்கி அடித்து அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு காரணம் கமல் ஹிந்தியில் படம் நடிப்பது பிடிக்காமல் தான் ரசிகர்கள் இந்த மாதிரி செய்கிறார்கள் என்று கதையை திருப்பி கமலுக்கு எதிராக செய்தியை மாற்றி விட்டார்கள்.
இதனால் மிகவும் நிலைகுலைந்து போன கமல்ஹாசன் பாலிவுட்டில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டு, தமிழ் சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்தி நடித்து வளர்ந்திருக்கிறார். ஆனால் அப்பொழுது இவரை எதிர்த்த ஹீரோக்கள் இப்பொழுது வரை சாதாரணமாகத்தான் இருந்து வருகிறார்கள். ஆனால் கமலஹாசன் இந்திய சினிமாவில் முன்னணி ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதுதான் அவர்களுக்கு கொடுத்த சரியான பதிலடி.