இப்ப தெரியுதா நான் ஏன் லேடி சூப்பர் ஸ்டார்ன்னு.? கெத்தாக பேசி வாய்விட்டு மாட்டிய நயன்தாரா

நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமா உலகின் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். டாப் கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கி கொண்டிருக்கிறார். நயன்தாராவுக்கு மட்டுமே இன்றுவரை கோலிவுட்டின் டாப் ஹீரோக்களுக்கு இணையாக தியேட்டரில் ரெஸ்பான்ஸும் அதிகமாக இருக்கிறது.

மற்ற கதாநாயகிகளை ஒப்பிடும் போது அழகு, திறமை என்பதை தாண்டி நயன்தாரா என்றாலே ஒரு ஆளுமை நிறைந்த கதாநாயகியாக திகழ்கிறார். மற்ற நடிகைகளை போல் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இருக்கிறார். அதுவே இவருக்கு ரசிகர்களிடையே ஒரு மிகப்பெரிய பாசிட்டிவ் ரெஸ்பான்ஸையும் கொடுக்கிறது.

நயன்தாரா, கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி தன்னுடைய ஆறு வருட காதலனான இயக்குனர் விக்னேஷ் சிவனை கரம் பிடித்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு சரகோசி முறையில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. இதற்கிடையில் நயன்தாரா தனிக் கதாநாயகியாக நடித்த கனெக்ட் திரைப்படம் சில தினங்களுக்கு முன் ரிலீஸ் ஆனது.

நயன்தாராவுக்கு இது மிகவும் முக்கியமான திரைப்படம். திருமணத்திற்கு பின் ரிலீஸ் ஆகும் முதல் திரைப்படம் இது மற்றும் இவருடைய சொந்த தயாரிப்பில் உருவான திரைப்படம். ஆனால் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. கொடுத்த பில்டப்புக்கெல்லாம் எதிர்மறையாக கலவையான விமர்சனத்தையே பெற்றது.

ஆனால் நடிகை நயன்தாரா கனெக்ட் திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக மாற்றியதற்கு நன்றி என நேற்று அறிக்கை விட்டிருக்கிறார். படம் தோல்வி என தெரிந்தும் இப்படி தைரியமாக அறிக்கை விடுவதெற்கெல்லாம் ஒரு தனி திறமை வேண்டும். இப்படி கெத்தாக பேசி மற்றவர்கள் வாயை அடைக்கும் திறமை இருப்பதால் தான் இவர் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் போல.

மற்ற நிறுவனங்களின் கீழ் நடித்த படங்கள் எதற்கும் இவர் ப்ரமோஷனுக்கு சென்றது இல்லை. அதற்கு அவர் சொல்லிய காரணம் பல தயாரிப்பாளர்களை உச்ச கட்ட டென்ஷன் ஆக்கியது என்றே சொல்லலாம். ஆனால் தன்னுடைய சொந்த தயாரிப்பு என்றதும் விழுந்து, விழுந்து ப்ரோமோஷன் செய்து கடைசியில் மொக்கை தான் வாங்கினார். ஆனால் அந்த தோல்வியையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாது இப்படி ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறார்.