சினிமாவை விட்டு ஒதுங்கினாலும் பிசினஸில் கல்லா காட்டும் பிரீத்தா ஹரி.. அட இவங்க வத்திக்குச்சி வனிதா தங்கச்சி தானா!

Pritha Hari: நடிகை பிரீத்தா ஹரி தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் படு பிசியாக இருந்த நடிகை. இவர் நடிகை என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. இதற்கு முக்கிய காரணம் இவர் கடந்த 22 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரியை திருமணம் செய்த கையோடு மொத்தமாக சினிமாவை விட்டு ஒதுங்கியது தான். சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தாலும் பிரீத்தா பிசினஸில் படு பிஸியாக இருக்கிறார்.

தன்னுடைய நேர்த்தியான உடை மற்றும் அலங்காரம் போன்றவற்றால் இன்ஸ்டாகிராமில் நிறைய ரசிகர்களை பிரீத்தா ஹரி இப்போது சம்பாதித்து இருக்கிறார். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உத்தண்டி என்னும் பகுதியில் இவருக்கு சொந்தமான மண்டபம் ஒன்று இருக்கிறது பிரீத்தா பேலஸ் என்னும் பெயரில் அமைந்திருக்கும் இந்த மண்டபம் ஒரே நேரத்தில் 350 முதல் 500 பேர் கூடும் அளவிற்கான இட வசதியோடு இருக்கிறது.

அந்த கல்யாண மண்டபம் இருக்கும் பகுதிக்கு அருகிலேயே பிரீத்தா ஹரி சில வருடங்களுக்கு முன்பு மெட்ராஸ் காபி ஹவுஸ் என்னும் சிற்றுண்டி உணவகத்தையும் தொடங்கி இருக்கிறார். இந்த உணவகத்தில் இருக்கும் பெரிய பிளஸ் என்னவென்றால் இதில் முழுக்க முழுக்க பெண்கள்தான் வேலை செய்கிறார்கள். ஈசிஆர் நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதால் இந்த உணவகம் ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே பிசினஸ் பிக் அப் ஆக ஆரம்பித்துவிட்டது.

கடந்த வருடம் சென்னை சாலிகிராமத்தில் குட்லக் என்னும் பெயரில் டப்பிங் மற்றும் எடிட்டிங் ஸ்டுடியோ ஒன்றையும் ஆரம்பித்திருக்கிறார் ப்ரீத்தா ஹரி. கோலாகலமாக தொடங்கப்பட்ட இந்த ஸ்டூடியோவை நடிகர் சூர்யா திறந்து வைத்தார். கல்யாண மண்டபம், உணவகம், ரெக்கார்டிங் ஸ்டூடியோ என அடுத்தடுத்து பிசினஸ் ஆரம்பித்திருக்கும் ப்ரீத்தா மாதத்திற்கு லட்சக்கணக்கில் அதில் வருமானம் ஈட்டுகிறார்.

சாமி மற்றும் சிங்கம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஹரியின் மனைவி என்பதை தாண்டி விஜயகுமார் மற்றும் மஞ்சுளா விஜயகுமார் தம்பதிகளின் இரண்டாவது மகள் ஆவார். சமீபத்தில் சமூக வலைத்தளத்தை கலக்கி கொண்டிருக்கும் பிக் பாஸ் வத்திக்குச்சி வனிதாவின் கூடப்பிறந்த தங்கை தான் இவர். சொந்தத் தொழில் மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமில் இவர் ஆகவும் இருக்கிறார்.