நித்யானந்தா உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. அவரே தன்னால் ஒரு இட்லி கூட சாப்பிட முடியவில்லை என்று கூறியிருந்தார். அவருடைய உருவ சிலைகளுக்கு ஆரத்தி எடுப்பது போல் விடீயோக்களும் வெளியாகின.
பொதுவாக இறந்தவர்களுக்கு மட்டுமே உருவபடத்திற்கு, சிலைகளுக்கு ஆரத்தி காட்டப்படும் அப்படியென்றால் நித்யானந்தா இறந்து விட்டாரா என பலர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த நித்யானந்தா தரப்பு கைலாசாவின் கடவுள் நித்யானந்தா என்பதால் அவருடைய உருவத்திற்கு ஆரத்தி காட்டப்படுவதாக பதில் அளித்தனர்.
அதன் பின்னர் நித்யானந்தா ஒரு வீடியோ காட்சியில் மக்களிடையே பேசினார். அப்போது நித்யானந்தா வழக்கத்திற்கு மாறாக ரொம்பவே உடல் மெலிந்து காணப்பட்டார். அதன் பின்னர் அவர் தொடர்பான புகைப்படங்களோ, விடீயோக்களோ வெளிவரவில்லை. இந்நிலையில் நித்யானந்தாவை பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நித்யானந்தாக்கு சொந்தமான கைலாசா இப்போது மொத்தமாக நடிகை ரஞ்சிதாவின் கைவசம் வந்துவிட்டது எனவும், அவருடைய சொத்துக்கள் அனைத்தும் ரஞ்சிதா கட்டுபாட்டில் உள்ளது எனவும் கூறுகின்றனர். மேலும் நித்யானந்தாவுக்கு இப்போது உதவ யாருமில்லை என்று கூறுகின்றனர்.
மேலும் நித்யானந்தாவை பற்றி எந்த ஒரு தகவலையும் ரஞ்சிதா வெளியில் வரவிடுவதும் இல்லையாம். இப்போது மொத்தமும் ரஞ்சிதாவின் கன்ட்ரோலில் வந்துவிட்டதாகவும், நித்யானந்தாவை அவர் கண்டு கொள்வதே இல்லை எனவும் சொல்லுகின்றனர்.
நித்யானந்தாவை பற்றி பல மாதங்களாக வதந்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அவர் உடல்நிலை சரி இல்லையென்றும், ஏன் நித்யானந்தா இறந்துவிட்டார் என்று கூட செய்திகள் வெளியாகின, ஆனால் இன்று வரை ரஞ்சிதா தரப்பிலிருந்து இது தொடர்பாக எந்த அறிக்கையும் வரவில்லை. இதுவே ரஞ்சிதா மீது சந்தேகம் அதிகரிப்பதற்கு காரணம்.