தங்களுக்கு நேர்ந்த அந்தரங்க சீண்டல்களின் கொடூரத்தை கூறிய நடிகைகள்.. ஆண்ட்ரியா போட்ட அணுகுண்டு

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு நடிகர் தனுஷ், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான வடசென்னை திரைப்படம் மாபெரும் ஹிட்டானது. இத்திரைப்படத்தின் பாகம்-2 காக பலரும் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஆண்ட்ரியாவும், ஐஸ்வர்யா ராஜேஷும் தங்களுக்கு நடந்த, அந்தரங்க சீண்டலால் ஏற்பட்ட கொடுமைகளை சமீபத்தில் பேட்டியில் பகிர்ந்துள்ளனர்.

அதில் நடிகை ஆண்ட்ரியா தான் பதினோரு வயதில் இருந்தபோது பேருந்தில் அவரது தந்தையுடன் சென்றாராம். அப்போது அவரது அருகில் அமர்ந்திருந்த ஒரு ஆண், ஆண்ட்ரியாவின் சட்டைக்குள் கைகளை விட்டு உடலை சீண்டியபோது ஆண்ட்ரியா என்ன செய்வதென்றே அறியாமல் சற்று முன்னால் சென்று அமர்ந்து விட்டாராம்.

இதை பற்றி தனது அருகிலிருந்த தந்தையிடமும், தாயிடமும் அப்போது கூறவில்லை என்றும் நான் ஏன் அப்படி செய்தேன் என தனக்கு இப்போது வரை புரியவில்லை என சமீபத்தில் அந்த பேட்டியில் பகிர்ந்தார். இதே போலவே நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தான் கல்லூரி படிக்கும் போது தனக்கு நடந்த அந்தரங்க சீண்டல் கொடுமையை பற்றி பேசி உள்ளார்.

அதில் அவர் ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும் போது , அருகில் அமர்ந்த ஒரு ஆண், ஐஸ்வர்யா ராஜேஷ் மேல் கைகளை வைத்து சீண்டினாராம். உடனே ஆட்டோவை நிறுத்தி வட சென்னை பட பத்மா போல் வாயில் வந்த கெட்ட வார்த்தை எல்லாம் பேசி அங்குள்ள அனைவரையும் வைத்து அந்த நபரை அடிக்க வைத்தாராம். இருவரும் வெவ்வேறு பேட்டியில் தங்களுக்கு நடந்த அந்தரங்க சீண்டலை பற்றிய கூறிய நிலையில் ஆண்ட்ரியாவின் செயல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..

ஏனென்றால் நடிகை ஆண்ட்ரியா எப்போதுமே வெளிப்படையாக பேசக்கூடியவர். எல்லா பேட்டிகளிலும் ஓப்பனாக மனதில் உள்ளதை சற்றும் தயக்கம் இல்லாமல் பேசுவார்.அவரே தனக்கு நடந்த அந்தரங்க சீண்டல் பற்றி தனது தாய் தந்தையிடமே கூறாமல் இருந்தது கேட்போருக்கு புதிதாக உள்ளது.

ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் தைரியமாக நடித்தாலும், பேட்டிகளில் எப்போதுமே சற்று தயங்கி தான் பேசுவார். ஆனால் அவரே தனது கல்லூரி வயதில் அவ்வளவு தைரியமாக அவருக்கு நடந்த அந்தரங்க சீண்டலை எதிர்கொண்டது பலருக்கும் ஆச்சரியமாக அமைந்தது. நடிகைகள் ஆண்ட்ரியாவும், ஐஸ்வர்யா ராஜேஷும் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.