12 வருடம் கழித்து மீண்டும் இணையும் திரிஷா, பிரகாஷ்ராஜ்.. பிரம்மாண்ட படத்தின் கதாபாத்திரம் என்ன தெரியுமா.?

கில்லி படத்தில் தளபதிக்கு ஜோடியாக திரிஷா நடித்திருப்பார். வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்திருப்பார். அதற்கு பின்னர் அபியும் நானும் என்ற படத்தின் மூலம் அப்பாவும், மகளுமாக பிரகாஷ்ராஜ் மற்றும் திரிஷா நடித்து உள்ளனர்.

அப்பாவுக்கும் மகளுக்கும் இருக்கும் அன்பை வெளிப்படுத்தும் விதமாக இந்த படம் வெற்றி பெற்றது. ராதாமோகன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், திரிஷா, கணேஷ் வெங்கட்ராமன், ஐஸ்வர்யா போன்ற பிரபலங்களில் நடித்திருந்தனர்.

கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் திரிஷா, பிரகாஷ்ராஜ் இணைகின்றனர். மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் படம் பொன்னியின் செல்வன்.

இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரபு, பிரகாஷ்ராஜ் போன்ற நடிகர் பட்டாளமே நடித்து வருகின்றனர். ஏ.ஆர். ரகுமான் இசையில் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன் இதனை தயாரிக்கின்றனர்.

2022ஆம் ஆண்டு இந்த படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட 500 கோடி பட்ஜெட்டில் உருவாகி கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் பிரகாஷ்ராஜுக்கு மகளாக திரிஷா நடிக்கிறார்.

சுந்தரசோழன் மற்றும் குந்தவி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது பொன்னின் செல்வன்.

thrisha-prakashraj
thrisha-prakashraj