தற்போது வருகின்ற படங்களை பார்க்கும் பொழுது யார் யாருடன் நடிக்கிறார்கள் என்பதை யூகிக்க முடியாத அளவிற்கு ஒவ்வொரு படங்களும் வெளிவருகிறது. இயக்குனராக இருக்கிறவர்கள் திடீரென்று ஹீரோவாக மாறுகிறார்கள். ஹீரோவாக இருக்கிறவர்கள் வில்லனாக மிரட்டுகிறார்கள். இப்படித்தான் பல படங்கள் சமீபத்தில் வெளி வருகிறது. அந்த வகையில் லியோ படத்தில் பல பிரபலங்கள் நடிக்கிறார்கள்.
இதில் இயக்குனராக இருந்து நமக்கு பரிச்சயமான மிஸ்கின் அவர்களும் வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து மறுபடியும் இவருக்கு வில்லன் கேரக்டரை இவரை தேடி வருகிறது. அதற்கு காரணம் இவருடைய எதார்த்தமான நடிப்பில் வில்லத்தனம் ஊறிப் போய் இருப்பதால். இவருக்கு முன்னாடி வில்லனாக நம்மளை ஆச்சரியப்படுத்தி நடித்தது எஸ் ஜே சூர்யா.
தற்போது இவரை ஓவர் டேக் செய்யும் அளவிற்கு மிஷ்கின் படையெடுத்து வருகிறார். அதாவது மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கிட்டத்தட்ட முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்துள்ளது.
மேலும் இப்படத்தில் அதிதி ஷங்கர், மிஷ்கின், யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். இதில் மிஸ்கின் வில்லன் கேரக்டரில் நடிக்கிறார். இது குறித்து பத்திரிகையாளர்கள் இவரிடம் கேட்ட பொழுது படம் ரொம்பவே நன்றாக வந்திருக்கிறது. அத்துடன் இதில் சிவகார்த்திகேயனுக்கு எதிராக நான் முழுவதுமாக வில்லனாக நடித்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
மேலும் சிவகார்த்திகேயனுக்கு இணையாக என்னுடைய கதாபாத்திரமும் நிறையவே இருக்கிறது. அத்துடன் இப்படம் கண்டிப்பாக மக்களுக்கு பிடித்த மாதிரி ஒரு வெற்றியை கொடுக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். அந்த அளவிற்கு இயக்குனர் பிரமாதமாக ஒவ்வொரு கதையும் வித்தியாசமாக எடுத்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில் இவர் சொல்வதை பார்க்கும் பொழுது இதுவரை நடித்த வில்லன்களையே மிஞ்சும் அளவிற்கு இவருடைய கதாபாத்திரம் பேசப்படும் என்று பெருமிதத்துடன் இருக்கிறார். இப்படியே தொடர்ந்து முன்னணியில் இருக்கும் நடிகர்கள், இயக்குனர்கள் வில்லனாகவே மாறிக்கொண்டு வருகிறார்கள். அதனாலே வில்லனுக்கு ஒவ்வொரு படத்துக்கும் மவுஸ் கூடிக்கொண்டே இருக்கிறது என்று சொல்லலாம்.