தமிழ் சினிமாவின் தொடர் தோல்வி படங்களை கொடுக்கும் நடிகர்கள் கூட தப்பித்துக் கொள்வார்கள். ஆனால் இயக்குனர்கள் ஒரே ஒரு தோல்வியை கொடுத்துவிட்டால் சினிமாவில் இருந்து தூக்கி வீசப்படுவார்கள்.
அந்த வகையில் சிம்பு(simbu)வுக்கு தோல்வி படம் கொடுத்த இயக்குனர் ஒருவர் தற்போது தமிழ் சினிமாவில் தடம் தெரியாமல் போய்விட்டார். இத்தனைக்கும் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய் மற்றும் விக்ரம் ஆகிய இருவருக்கும் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.
சிம்பு எப்போதுமே தொடர் வெற்றியை கொடுக்கும் நடிகர் கிடையாது. அத்தி பூத்தாற்போல் எப்போதாவது வெற்றி கொடுப்பார். அந்த வகையில் மாட்டிய சில படங்கள்தான் கோவில், மன்மதன், விண்ணைத்தாண்டி வருவாயா போன்றவை.
சிம்புவுக்கு தோல்விப் படங்கள் கொடுத்த இயக்குனர்கள் நிறைய பேர் தமிழ் சினிமாவில் காணாமல் போயுள்ளனர். அந்த வகையில் 2011 ஆம் ஆண்டு சிம்பு மற்றும் தரணி கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை தழுவிய திரைப்படம் ஒஸ்தி.
அதுவரை தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குனராக வலம் வந்த தரணி தான் கடைசியாக இயக்கிய குருவி மற்றும் ஓஸ்தி போன்ற படங்கள் தோல்விகளை சந்தித்ததால் தற்போது வரை பட வாய்ப்புகள் கிடைக்காமல் தடுமாறி வருகிறார்.
இத்தனைக்கும் விக்ரமுக்கு தில், தூள் போன்ற மாபெரும் வெற்றிப் படங்களையும், விஜய்க்கு கில்லி என்ற சூப்பர் ஹிட் படத்தையும், குருவி என்ற சுமாரான படத்தையும் கொடுத்தவர். கடந்த 11 வருடங்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் தரணி தடுமாறிக் கொண்டிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.
அவர் மீண்டு வருவதற்கு ஒரே வழி அவருடன் பணியாற்றிய முன்னணி நடிகர்கள் யாரேனும் வாய்ப்பு கொடுத்தால் தான் உண்டு. ஆனால் தற்போது அவர்கள் இருக்கும் உச்சத்திற்கு தரணியை ஏறெடுத்து பார்ப்பார்களா என்பதே சந்தேகம்தான்.
