உலக நாயகன் கமலஹாசன் தற்போது லைக்கா தயாரிப்பில் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் இந்தியன் 2 படத்தை இயக்கும் முயற்சியில் ஷங்கர் இறங்கி இருந்தார். ஆனால் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே ஏதாவது ஒரு பிரச்சனை வந்துகொண்டே இருந்தது.
இந்நிலையில் இப்போது இந்தியன் 2 படப்பிடிப்பு 90% நிறைவடைந்துள்ளது. அதில் கமல் நடித்த காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளதாம். அதிலும் கமலுடைய காட்சிகள் அனைத்தும் முடிக்கப்பட்டுள்ளதாம். இந்தியன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் காப்பியை கமல் பார்த்துள்ளார்.
அதைப் பார்த்தவுடன் இதுவரை இல்லாத அளவுக்கு கமல் மகிழ்ச்சி அடைந்து உள்ளாராம். கமலை பொருத்தவரையில் தனது படங்களில் புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வர வேண்டும் என பல முயற்சிகள் செய்யக்கூடியவர். மேலும் ரசிகர்கள் வியக்கத்தக்க விஷயங்களை கமல் செய்துள்ளார்.
இந்தியன் 2 படத்தை பார்த்தவுடன் இந்தியாவில் ஷங்கரை அடிச்சுக்க ஆளே இல்லை என்று புகழ்ந்து தள்ளி உள்ளாராம். இப்படம் வெளியான பின்பு பாகுபலி, கே ஜி எஃப் போன்ற எந்தப் படத்தையும் இந்தியன் 2 படத்துடன் ஒப்பிட முடியாத வேறு மாதிரி இயக்கியுள்ளாரம்.
மேலும் இந்தியன் 2 படம் வெளியான பிறகு ஷங்கருக்கு இந்திய சினிமாவில் உருவாகும் என்று கமல் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துள்ளார். மேலும் உலகநாயகனின் வாயால் இப்படி ஒரு பாராட்டை கேட்ட ஷங்கர் அதிர்ச்சியில் உறைந்து உள்ளாராம். கமல் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
இந்த படத்தையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு இந்தியன் 2 உருவாகி இருக்கிறதாம். கமல் சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கி மாஸ் ஹிட் கொடுத்து வருகிறார். அந்த வகையில் சரித்திரம் பேசும் படமாக இந்தியன் 2 படம் இருக்கும். இந்தச் செய்தியை கேட்ட ரசிகர்கள் இந்தியன் 2 படத்தின் ரிலீஸுக்கு ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.