சினிமாவை பொறுத்தவரை குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் முன்னணியில் இருக்கும் சில நடிகர்கள் ஆதிக்கம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. சிவாஜி, எம்ஜிஆரில் ஆரம்பித்து ரஜினி, கமல் தற்போது விஜய், அஜித் வரை அதை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அதிலும் தமிழகத்தில் விஜய், அஜித் இருவருக்கும் ஏராளமான ரசிகர் கூட்டம் இருக்கிறது. தற்போது சமூக வலைதளங்கள் பெருகி விட்ட இந்த காலத்தில் தல, தளபதியின் ரசிகர்கள் அனைவரும் தங்களைக் கவர்ந்த நடிகர்களை பற்றி சோசியல் மீடியாவில் பேசி அதை டிரெண்டாக்கி வருவது வழக்கம்.
அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. அதாவது நடிகர் அஜித்தின் நடிப்பில் மிகவும் அதிரடியாக உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இரண்டு வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் டிரைலர் வெளியாகி அஜித் ரசிகர்கள் உட்பட அனைவரையும் கவர்ந்தது. வரும் பொங்கலுக்கு வெளியாக இருந்த வலிமை திரைப்படம் கொரோனா தொற்றின் காரணமாகவும், தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கும் காரணத்தாலும் தள்ளிவைக்கப்பட்டது.
இதனால் வலிமை திரைப்படத்தை கொண்டாட ஆவலுடன் காத்திருந்த அஜித் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். தற்போது வலிமை படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகியது குறித்து விஜய் ரசிகர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அது என்னவென்றால் தளபதி விஜய்யின் நடிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் 100 கோடி வரை வசூல் சாதனை செய்தது. இந்தப் படம் வெளியானபோது கொரோனா தொற்று அதிகமாக இருந்ததால் தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இருப்பினும் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த நிகழ்வைப் பற்றி கூறும் விஜய் ரசிகர்கள் நல்ல படம் எப்படி இருந்தாலும் ஓடும். வலிமை படத்திற்கு நம்பிக்கை இல்லை அதனால்தான் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவில்லை என்று அஜித் ரசிகர்களை கலாய்த்து வருகின்றனர்.
மேலும் படம் வெளியானால் லாபத்தை பார்க்க முடியாது என்று பயந்து விட்டார்கள் என்றும் அஜித் ரசிகர்களோடு சண்டை போட்டு வருகின்றனர். விஜய் ரசிகர்களின் இந்த கிண்டலுக்கு அஜித்தின் ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வலிமை திரைப்படத்தை சோசியல் மீடியாவில் தற்போது ட்ரெண்டாக்கி வருகின்றனர்.