மாஸ்டரால் கோபம் அடைந்த அஜித்.. லெப்ட் அண்ட் ரைட் வாங்கி போனை கட் செய்த சம்பவம்

தமிழ் சினிமாவில் எந்த பின்புலமும் இன்று தன்னுடைய உழைப்பால் முன்னணி நடிகராக வளர்ந்து இருப்பவர் அஜித்.புகழின் உச்சத்தில் இருந்தும் அஜித் எப்பொழுதும் எல்லோரிடமும் அன்பாகவும், மரியாதையுடனும், தன்னுடைய மனதில் படுவதை வெளிப்படையாக கூறிவிடும் குணம் கொண்டவராக இருந்து வருகிறார். இதனாலேயே என்னவோ தமிழ் சினிமா இவரை கொண்டாடி வருகிறது.

ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா விஜய், அஜித் முதல் தொடங்கி சினிமாவில் தற்போது பெரும்பாலான படங்களில் ஸ்டண்ட் காட்சிகள் வடிவமைத்து வருகிறார். அண்மையில் விமல் நடித்த காவல் என்னும் படத்தில் பணியாற்றியிருந்தார். அந்த படத்தின் படப்பிடிப்பில் இருந்த போது நடிகர் அஜித் இவருக்கு தற்செயலாக போன் செய்துள்ளார்.

அப்போது பேசுகையில், அஜித் பிஸியாக இருக்குறீர்களா? என கேட்டதற்கு சில்வா, பெரிதாக ஒன்றுமில்லை, காவல் என்னும் ஒரு சிறு படத்தின் படப்பிடிப்பில் தான் உள்ளேன், நீங்கள் கூறுங்கள் என கூறியுள்ளார். இந்த பதில் தான் நடிகர் அஜித்தை கோபமுற செய்துள்ளது.

எடுக்கும் போது எந்த படமும் சிறியதோ, பெரியதோ இல்லை அதனை பார்க்கும் ரசிகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் நீங்கள் கூறாதீர்கள், எல்லோரும் சிறிய படங்களில் தொடங்கி தான் தற்போது வளர்ந்துள்ளனர் என கூறி, படப்பிடிப்பு முடிந்தவுடன் தன்னை அழைக்கும் படி லெப்ட் அண்ட் ரைட் வாங்கி போன்’ஐ வைத்துள்ளார். இந்த செய்தி தற்போது வெளிவந்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பெரும்பாலும் கொஞ்சம் வளர்ந்த பின் தன்னிலை மறந்து போகும் சினிமாவுலகத்தினர் மத்தியில், தான் எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் தன்னிலை உணர்ந்து, பணிவுடன் அஜித் கூறிய பதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அஜித்தை போலவே பின்புலம் இன்றி தன் உழைப்பால் வளர்ந்து வரும் விமல், சில வெற்றிகளுக்கு பின் கொஞ்சம் சறுக்கல்களை சந்தித்தார். தற்போது மீண்டும் விலங்கு என்னும் வெப்சீரிஸ் மூலம் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளார்.