Good Bad Ugly: அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் அஜித் ரசிகர்களுக்கு ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த மிகப்பெரிய ட்ரீட் என்று கூட சொல்லலாம்.
அஜித்தின் தீவிர ரசிகர் அவரை வைத்து படம் எடுத்தால் இப்படி ஒரு சம்பவம் தான் நடக்கும் என்பதை செய்து காட்டி இருக்கிறார்.
ஆதிக் சார் இப்படி பண்ணிட்டிங்களே!
ஆதிக் ரவிச்சந்திரனை தமிழ் சினிமா ரசிகர்களிடையே கொண்டு சேர்த்த படம் என்றால் அது மார்க் ஆண்டனி. விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா வின் நடிப்பில், யாரும் எதிர்பார்க்காத கதை களத்தில் பெரிய வெற்றியை கொடுத்திருந்தார்.
அதை தொடர்ந்து ரிலீசான குட் பேட் அக்லி படம் மார்க் ஆண்டனியை தூக்கி சாப்பிடும் அளவுக்கு இருந்ததா என்று கேட்டால் ஜனரஞ்சகமான ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான்.
அஜித்குமாரை அணு அணுவாக ரசித்த அவருடைய ரசிகர்களுக்கு படம் திருப்தியை அளித்திருக்கிறது. ஆனால் பொதுவான சினிமா ரசிகர்கள், பேமிலி ஆடியன்ஸ்கள் அந்த அளவுக்கு இந்த படத்தின் திரைக்கதையோடு ஒன்றி போவார்களா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
மார்க் ஆண்டனி படத்தை பொருத்தவரைக்கும் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா என்ற பிம்பங்கள் இல்லாமல் படத்தின் திரைக்கதை வெற்றி பெற்றது. அஜித்தின் குட் பேட் அக்லியை பொறுத்தவரை அஜித்தை தாண்டி படம் மனதோடு ஒன்றி போகும் கதை களத்தில் அமையவில்லை.