Good Bad Ugly: அஜித் நடித்த குட் பேட் அக்லி நேற்று ரிலீசான நிலையில் ரசிகர்கள் இந்த படத்தை பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள்.
அஜித் ரசிகர்களுக்கு இத்தனை வருடங்கள் இல்லாத அளவுக்கு இப்படி ஒரு படம் கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
அஜித் குமாரை இதுவரை யாரும் பார்த்திராத பரிணாமத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் காட்டி இருக்கிறார் அஜித்தின் 62 படங்களையும் இந்த படத்திற்கு ரெஃபரன்ஸ் ஆக கொடுத்து இருக்கிறார்.
தளபதிக்கு தரமான சம்பவம் பண்ணிய ஏகே
அதே நேரத்தில் சினிமாவில் இருந்து விலகி அரசியலை நோக்கி பயணிக்க இருக்கும் நடிகர் விஜய்க்கும் தரமான பிரியாவிடை கொடுத்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
பொதுவாக அஜித் மற்றும் விஜய் தங்களுடைய படங்களில் வில்லனிடம் பேசும் வசனங்கள் எல்லாம் ஒருவரை ஒருவர் மறைமுகமாக தாக்கிக் கொள்கிறார்கள் என்று சொல்லப்பட்டது.
ஆனால் இந்த படத்தில் தன்னுடைய நண்பரை ஒரு சில காட்சிகளில் நினைவு படுத்தி இருக்கிறார் அஜித். படத்தில் முதல் பாதியில் த்ரிஷா வரும் காட்சியில் கில்லி படத்தில் அவர் கேட்கும் காரப்பொறி சீனை வைத்திருக்கிறார்கள்.
அதே மாதிரி இரண்டாம் பாதியில் துப்பாக்கி படத்தில் விஜய் பேசி பெரிய அளவில் பிரபலமான ஐ எம் வெயிட்டிங் என்ற வசனத்தை தன்னுடைய ஸ்டைலில் அஜித்குமார் பேசி இருப்பது தியேட்டரில் பெரிய அளவில் கைதட்டலை பெற்றிருக்கிறது.