விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத விதமாக சிம்பு ஒரு பாடலை பாடியிருந்தார். தீ தளபதி என்று தொடங்கும் அந்த பாடல் சமீபத்தில் வெளியாகி சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் பாடலை சிம்பு பாடியதோடு மட்டுமில்லாமல் நடித்திருந்ததும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
நிச்சயம் இப்படி ஒரு ஸ்பெஷல் என்ட்ரியை ரசிகர்கள் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மேலும் இதற்காக சிம்பு எந்தவிதமான சம்பளமும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எதற்காக அவர் விஜய்க்காக இப்படி ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்பதுதான் தற்போது பலரின் கேள்வியாக இருக்கிறது.
இதற்கு பின்னணியில் பல கதைகள் சொல்லப்பட்டாலும் உண்மையில் ஒரு இக்கட்டில் இருந்த சிம்புவை விஜய் தேடி வந்து காப்பாற்றியதால் தான் அவர் தன் நன்றி கடனை இந்த விதத்தில் திருப்பிக் கொடுத்திருக்கிறார். அதாவது சில வருடங்களுக்கு முன்பு சிம்புவின் நடிப்பில் வாலு என்ற திரைப்படம் வெளியானது. ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்த திரைப்படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரித்திருந்தார்.
2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அந்தத் திரைப்படம் பல்வேறு தடங்கல்களின் காரணமாக 2015 ஆம் ஆண்டு தான் ரிலீஸ் ஆனது. அந்த காலகட்டத்தில் சிம்புவுக்கும் தயாரிப்பாளருக்கும் பணம் சம்பந்தமாக ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்திருக்கிறது. அந்த விவகாரம் நீதிமன்றம் வரை கூட சென்றது. இதனால் தவித்துப் போன சிம்பு அஜித்திடம் உதவி கேட்டிருக்கிறார். ஏனென்றால் தயாரிப்பாளர் சக்கரவத்தியும், அஜித்தும் மிகவும் நெருங்கிய நண்பர்கள்.
இவர்களது கூட்டணியில் ஏகப்பட்ட திரைப்படங்கள் வெளிவந்திருக்கிறது. ஆனால் அவர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக இப்போது அவர்கள் பிரிந்து இருக்கின்றனர். தயாரிப்பாளருக்கு அஜித் மிகவும் நெருக்கம் என்ற காரணத்தினாலேயே சிம்பு அவரிடம் உதவி கேட்டு இருக்கிறார். மேலும் அந்த காலகட்டத்தில் சிம்பு அஜித்தின் நண்பராகவும், ரசிகராகவும் இருந்தார். ஆனால் இந்த விவகாரத்தில் அஜித் அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை.
சிம்பு வாய் திறந்து கேட்டும் கூட அவர் ரொம்பவும் மெத்தனமாக இருந்திருக்கிறார். ஆனால் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட விஜய் தாமாகவே முன்வந்து சிம்புவுக்கு இருந்த பண பிரச்சனையை தீர்த்து வைத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் படம் வெளியாகவும் பேருதவி செய்திருக்கிறார். இதைத்தான் புலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் டி ராஜேந்தர் வெளிப்படையாக கூறினார். மேலும் அவர் தன் நன்றியையும் தெரிவித்தார். இந்த ஒரு காரணத்தால் தான் சிம்பு வாரிசு திரைப்படத்தில் சம்பளம் வாங்காமல் ஒரு பாடலை பாடி கொடுத்திருக்கிறார்.