புருஷன் மாதிரியே ஷாலினிக்கு இருக்கும் தங்கமான மனசு.. உண்மையை மனம் திறந்து பேசிய நடிகர்

Ajithkumar Shalini: நடிகர் அஜித்குமார் என்றாலே அவர் பொது நிகழ்ச்சிக்கு அதிகமாக வர மாட்டார், சமூகப் பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுக்க மாட்டார் ,யாருக்கும் உதவி செய்ய மாட்டார் என்ற நிறைய தவறான கருத்துக்கள் வெளி வருகின்றன. ஆனால் இதில் எதுவுமே துளி அளவு கூட உண்மை இல்லை. வலது கை செய்வது இடது கைக்கு கூட தெரிய கூடாது என்ற பழமொழிக்கு ஏற்ப அஜித் உதவி செய்து வருகிறார்.

ஆயிரம் பேரை கூப்பிட்டு அரங்கம் அதிர கைதட்டு வாங்கி உதவி செய்யும் பழக்கம் அஜித்துக்கு கிடையாது. மேலும் அஜித் தான் எனக்கு உதவி செய்தார் என்று கலைஞர்கள் வெளியில் வந்து சொல்லுவதும் அஜித்துக்கு பிடிக்காது. இதனால் தான் நிறைய உதவிகள் அவர் செய்திருந்தாலும் அது எதுவுமே வெளியில் தெரியாமல் அவர் மீது தேவையில்லாத மாய பிம்பம் மட்டுமே விழுந்து விட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து இறந்த பிறகு தான் அஜித் அவருடைய மகனுக்கு பீஸ் கட்டி வந்த விஷயம் வெளியில் தெரிய வந்தது. இப்படி யாராவது ஒரு ஒன்று இரண்டு பேர் பகிரும் விஷயங்களால் தான் அஜித் எப்பேர்பட்டவர் என்பது வெளியில் தெரிய வருகிறது. மாரிமுத்து போல் அந்த லிஸ்டில் இருப்பவர் தான் நடிகர் பொன்னம்பலம்.

அஜித்திடம் உதவி கேட்ட நடிகர்

பொன்னம்பலத்தின் நெருங்கிய நண்பர் ஒருவரின் குழந்தைக்கு ரொம்பவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறது. மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பார்ப்பதற்கு 55,000 தேவைப்பட்டிருக்கிறது. அந்த சமயம் பொன்னம்பலம் அஜித்துடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் .சரி இந்த உதவியை அஜித்திடம் கேட்கலாம் என்று எல்லா விவரங்களையும் சொல்லி பொன்னம்பலம் பேசி இருக்கிறார். அஜித் சரி என்று சொல்லிவிட்டு சூட்டிங் நடிக்க சென்று விட்டாராம்.

மறுபடியும் லஞ்ச் பிரேக்கில் பொன்னம்பலம் இந்த விஷயத்தை ஞாபகப்படுத்தலாம் என்று சொல்லி அஜித்திடம் சென்றிருக்கிறார். அஜித்தின் அருகே சென்று சார் அந்த குழந்தை என்று சொன்னதும் அஜித் நான் ஷாலினி இடம் சொல்லி விட்டேன். அவர் மருத்துவமனைக்கு சென்று பில்லும் கட்டி விட்டார். அந்த குழந்தை சேஃப் என்று சொல்லி இருக்கிறார்.

பரபரப்பான ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் உடனே தன் மனைவிக்கு போன் செய்து பில்லை கட்ட சொன்னது ரொம்பவே பெரிய விஷயம். அதிலும் மற்றவரிடம் காசை கொடுத்து அனுப்பாமல் ஷாலினியே நேரில் சென்று பில் கட்டியது ஆச்சரியமான விஷயம். எந்த நடிகரும் இந்த அளவுக்கு இறங்கி உதவி செய்திருக்க மாட்டார் என பொன்னம்பலம் மனம் உருகி சொல்லி இருக்கிறார்.