அஜித் ரொம்ப ஆசைப்பட்டு செய்த ஒரே விஷயம்.. கோடி கணக்கில் பணம் வந்ததால் இழுத்து மூடிவிட்டார்

நடிகர் அஜித்குமார் மற்ற நடிகர்களை ஒப்பிடும்போது புகழுக்கும், விளம்பரத்திற்கும் ஆசைப்படாதவர். அதேபோன்று எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும், பேட்டிகளிலும் அவ்வளவு எளிதாக இவர் கலந்து கொள்ள மாட்டார். அவருடைய படங்களுக்கான எந்த ஒரு அதிரடியான பிரமோஷன் வேலைகளை கூட அஜித் செய்ய விரும்பமாட்டார்.

மேலும் தன்னுடைய ரசிகர்களை எந்த ஆதாயத்திற்காகவும் பயன்படுத்த விரும்ப மாட்டார் அஜித்குமார். அவருடைய ரசிகர்களுக்கும், அவருக்குமான உறவு என்பது டிக்கெட் எடுத்து படம் பார்ப்பதோடு இருக்க வேண்டும் என்பதை நினைத்து தான் தன்னுடைய ரசிகர் மன்றத்தையே கலைத்தார். தன்னால் ரசிகர்கள் எந்த விதத்திலும் கஷ்டப்படக் கூடாது என்று நினைப்பவர்.

அப்படிப்பட்ட அஜித் குமார் தன்னுடைய வாழ்நாளில் ரொம்பவும் ஆசைப்பட்டு ஒரு விஷயத்தை செய்து இருக்கிறார். அவருடைய அம்மாவின் பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார் அஜித். அந்த அறக்கட்டளையின் மூலம் அவர் வசித்து இருக்கும் திருவான்மியூர் பகுதிகளில் மரம் நடுவது மற்றும் இல்லாதவர்களுக்கு பண உதவி செய்வது என்று நிறைய சேவைகளை செய்து வந்திருக்கிறார்.

மேலும் இந்த விஷயம் வெளியில் தெரியாத அளவுக்கு பார்த்துக் கொண்டார் அஜித். ஆனால் இது எப்படியோ அவருடைய ரசிகர்களுக்கு தெரிந்து விட்டது. அஜித் உடைய நல்ல நோக்கத்திற்கு உதவ வேண்டுமென்ற எண்ணத்தில் அஜித் ரசிகர்களும் அந்த அறக்கட்டளைக்கு பண உதவி செய்ய முன்வந்து இருக்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து எல்லாம் கோடிக்கணக்கில் அறக்கட்டளைக்கு பணம் வர ஆரம்பித்திருக்கிறது.

அஜித் கேட்காமலேயே தன்னுடைய அறக்கட்டளைக்கு இவ்வளவு பணம் வருவதை பார்த்து பயந்துவிட்டார். இது தன்னுடைய அம்மாவின் பெயரில் தன் சொந்த காசை வைத்து நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்ட அறக்கட்டளை. இதை ஏன் மற்றவர்கள் காசு கொடுத்து நாம் நடத்த வேண்டும் என்று யோசித்து இருக்கிறார். உடனேயே அந்த அறக்கட்டளையையும் இழுத்து மூடிவிட்டார் அஜித் குமார்.

அஜித்தை போன்று பல நடிகர்கள் அறக்கட்டளை எல்லாம் தொடங்கி இருக்கிறார்கள். அதில் சிலர் சுயலாபம் தான் அடைந்திருக்கிறார்கள். ஆனால் அஜித் குமார் தான் தொடங்கிய அறக்கட்டளை தன்னுடைய சொந்த காசுலயே நடக்க வேண்டும் என்று விருப்பப்பட்டிருக்கிறார். அது நடக்காத பட்சத்தில் அந்த நிறுவனத்தையே மூடிவிட்டார். இந்த விஷயம் அவரிடம் ரொம்பவும் பாராட்டுத்தக்கது என்று சொல்லலாம்.