Director Selva Ragavan: பொதுவாக செல்வராகவன் படங்கள் என்றாலே குடும்பத்துடன் பார்க்கும் படியாக இருக்காது. ஆனாலும் இவர் படத்தை பார்ப்பதற்கு கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் அலை மோதிக் கொண்டு தியேட்டர்களில் பார்த்து வருவார்கள். அந்த அளவிற்கு இவருடைய படம் இளைஞர்களின் மனதை கொள்ளை அடிக்கும் வகையில் இருக்கும்.
அப்படிப்பட்ட இவருடைய படம் 7ஜி ரெயின்போ காலனி. இதில் சோனியா அகர்வால் மற்றும் ரவி கிருஷ்ணன் நடிப்பில் மிகப்பெரிய ஹிட் ஆகி ரசிகர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கு முடிவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பிக்க இருக்கிறது.
மேலும் இப்படத்தில் ஹீரோவாக ரவிகிருஷ்ணா தான் நடிக்கிறார். ஆனால் இந்த முறை ஹீரோயின் சோனியா அகர்வால் இல்லை. இவருக்கு பதிலாக மலையாள ஹீரோயினை தேடிப்பிடித்து இதில் நடிப்பதற்கு முயற்சி எடுத்திருக்கிறார். அதுவும் எப்படிப்பட்ட ஹீரோயின் என்றால் குழந்தை நட்சத்திரமாக இதுவரை நடித்து வந்தவர்.
அதாவது திரிஷா நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ராங்கி திரைப்படத்தில் சுஷ்மிதாவாக அனஸ்வர ராஜன், திரிஷாவின் அண்ணன் மகளாக ஒரு குழந்தை நடித்து இருந்தது. அந்தப் பெண் தான் தற்போது செல்வராகவன் இயக்க உள்ள 7ஜி ரெயின்போ காலனி படத்தில் இரண்டாம் பாகத்தில் ஹீரோயினாக நடிக்கப் போகிறார்.
இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் ஆச்சிரியத்தில் உறைந்து போய் இருக்கிறார்கள். அதற்கு காரணம் கடந்த வருடம் குழந்தையாக பார்த்த ஒரு பெண் தற்போது ஹீரோயினாக மாறிவிட்டாரா என்ற ஆச்சரியம் தான். இது எப்படி சாத்தியமாகும் என்று கேள்வி எழுந்த நிலையில், ஒரு உண்மை புரிகிறது. அதாவது ராங்கி திரைப்படம் சில வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டிருக்கிறது. அப்பொழுதுதான் அந்த குழந்தை சுஷ்மிதாவாக நடித்திருக்கிறார்.
அந்த வகையில் ராங்கி திரைப்படம் ரொம்ப லேட் ஆக தான் ரிலீஸ் ஆயிருக்கிறது. அதனால் தான் குழந்தையாக நடித்து முடித்ததும் ஹீரோயினாக மாறிவிட்டார். எது எப்படியோ செல்வராகவன் படம் எப்படி இருக்கும் என்று நம் அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் தற்போது ஹீரோயினாக அறிமுகமாக இருக்கும் இந்த குழந்தை நடிக்கப் போகிறது என்றால் படம் எந்த மாதிரியாக இருக்கும் என்று பார்க்கலாம்.