மட்டமான விளம்பரத்தில் நடிக்க மறுத்த அல்லு அர்ஜுன்.. ரியல் ஹீரோ நீங்கதான்

சினிமா நடித்து பணம் சம்பாதிப்பது போலவே நடிகர்களுக்கு மற்றோரு மிகப்பெரிய வருமானத்தை தரக்கூடியதாக இருப்பது விளம்பரங்கள். சில காலம் முன்பு விளம்பரங்களில் நடிப்பதற்கு என தனியாக நடிகர்கள் இருந்தனர். பின்னர் ரசிகர்களை எளிதாக சென்றடைய சினிமா பிரபலங்களை பயன்படுத்த துவங்கினார் விளம்பர நிறுவனங்கள்.

புஷ்பா படத்தின் மூலம் நாடேங்கும் அறியப்படும் நடிகராக மாறியிருப்பவர் அல்லு அர்ஜுன். தெலுங்கில் முன்னணியில் இருக்கும் இவருக்கு ரசிகர்கள் நாடேங்கிலும் உருவாக்கியுள்ளனர். இதன் அடிப்படையில் தன்னுடைய அடுத்தக்கட்ட வளர்ச்சியை கவனமாக எடுத்து வைத்து வருகிறார்.

அல்லு அர்ஜுன் சமீபகாலமாக பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்திய ‘ரப்பிடோ’ என்னும் நிறுவனத்திற்கு அம்பாஸடராக ஒப்பந்தமாகி அதன் விளம்பரங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் பிரபல புகையிலை நிறுவனம் ஒன்று அவரை அணுகி விளம்பரத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்துள்ளது. ஆனால் அதற்கு சற்றும் யோசிக்காமல் அல்லு அர்ஜுன் நடிக்க மறுத்துவிட்டார்.

காரணம் புகையிலை விளம்பரத்தில் தான் நடித்தால் தன்னுடைய ரசிகர்கள் கெட்ட வழியில் செல்வதற்கு தானே ஒரு பாதையை அமைத்துக் கொடுத்து விடுவேன் அதனால் இந்த விளம்பரத்தில் கண்டிப்பாக நடிக்க மாட்டேன் என கூறி மறுத்துள்ளார். ரசிகர்களுக்கு மதிப்பு கொடுத்துள்ள இவருக்கு ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இதற்கேல்லாம் முன்னோடியாக தமிழில் முன்னணியில் இருக்கும் அனைத்து நடிகர்களும் பணத்திற்காக விளம்பரங்களில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்து விட்டனர். ரஜினியும் அஜித்தும் அதற்கு முன்னுதாரணமாக திகழ்கின்றனர். விஜய் முன்பு ஒரு குளிர்பான விளம்பரத்தில் நடித்திருந்தாலும் பின்னர் நாட்டிற்கு அதனால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து தற்போது விளம்பரங்களை முற்றிலும் தவிர்த்து விட்டார்.

தெலுங்கில் சில நடிகர்கள் இவ்வாறான விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். அங்கு தற்போது அல்லு அர்ஜுன் முன்னுதாரணமாக செயல்பட்டுள்ளார். நடிகர்களை அப்படியே பின் தொடரும் ரசிகர்களை மனதில் வைத்து விளம்பரங்களில் நடிக்க வேண்டும்.

ஆனால் இந்த நிலைமை வடமொழி நடிகர்களிடம் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. முன்னணி நாயகர்களான ஷாருக்கான் அஜய் தேவ்கன், ரன்வீர் சிங், ஏன் ஜாம்பவானான அமிதாப் பச்சன் கூட பாக்கு விளம்பரம் ஒன்றில் பணத்திற்காக மட்டுமே நடித்துள்ளனர்.