முன்பு விதைத்த மோசமான விதை.. ரீ என்ட்ரியால் தியேட்டரில் இருந்து துரத்தப்பட்ட அமலா பால்

சினிமாவில் யாரையும் நம்ப முடியவில்லை என்றும், எல்லாரும் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் அமலா பால் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். ‘கடாவர்’ பட செய்தியாளர் சந்திப்பின் போது அமலா பால் இந்த படத்திற்காக சந்தித்த இடையூறுகளை செய்தியாளர்களிடம் பகிர்ந்துள்ளார்.

இயக்குனர் விஜய் உடனான திருமண முறிவுக்கு பிறகு, அமலா பால் சினிமாவை மட்டுமே நம்பி எடுத்த முடிவு தான் ‘ஆடை’ திரைப்படம் . ஆனால் அந்த திரைப்படமே அமலாவின் சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலைமைக்கு கொண்டு வந்து விட்டது.

2019 ஆம் ஆண்டு வெளியான ஆடை திரைப்படத்திற்கு பிறகு அமலா பால் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் ‘கடாவர்’ . புதுமுக இயக்குனர் அனூப்.எஸ்.பணிக்கர் இயக்கத்தில் அமலாபாலுடன் இணைந்து ஹரிஷ் உத்தமன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தினை அமலா தன்னுடைய சொந்த புரொடக்சனில் தயாரித்து இருக்கிறார்.

இந்த படத்தை தியேட்டர் ரிலீஸிற்காக கொண்டு செல்லும் போது, அதிகப்படியான கிளாமர் காட்சிகள் இருப்பதால் வெளியிட மறுத்துவிட்டனர். இந்த படம் தொடங்கப்பட்டதிலே இருந்தே பல சிக்கல்களை சந்தித்ததாக இந்த திரைப்பட குழுவினர் தெரிவித்துள்ளனர். அந்த படத்திற்கு தயாரிப்பாளர் கிடைப்பதிலேயே பல சிக்கல்கள் இருந்ததால் தான் அமலா பால் தன்னுடைய சொந்த புரொடக்சனையே ஆரம்பித்து இந்த படத்தை தயாரித்துள்ளார்.

தற்போது இந்த திரைப்படத்தை இந்தியாவின் மிக முக்கியமான ஒடிடி தளமான டிஸ்னி ஹாட்ஸ்டார் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியிட திட்டமிட்டு உள்ளது. இந்த படம் வரும் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகும்.

இதை பற்றி பேசுகையில் நடிகை அமலா பால் சினிமா உலகில் யாரையும் நம்ப முடியவில்லை என்றும் எல்லாரும் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், கடந்த 3 வருடங்களில் பல இன்னலைகளை சந்தித்து விட்டதாகவும் இந்த படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

கடாவர் ஒரு மெடிக்கல் திரில்லர் படம் ஆகும். இந்த படத்தில் நடிகை அமலா பால் காவல் துறையில் பணிபுரியும் தடயவியல் நிபுணர் டாக்டர் பத்ராவாக நடித்துள்ளார். இந்த படத்திற்காக தமிழ்நாட்டில் உள்ள பல மருத்துவமனைகளின் பிணவறைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு இருக்கிறார் அமலா.