போட்டி போட்டு கஜானாவை ரொப்பிய அமரனும், லக்கி பாஸ்கரும் .. தமிழுக்கு மட்டும் ஓரவஞ்சனை செய்யும் துல்கர் சல்மான்

தீபாவளி தினத்தன்று வெளியான அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் இந்த இரண்டு படங்களும் போட்டி போட்டு வசூல் வேட்டை ஆடி வருகிறது. ஆறு நாட்களில் மட்டுமே திரையரங்குகளில் ஓடி கோடிக்கணக்கில் வசூலித்து தயாரிப்பாளர்களுக்கு கொள்ள லாபத்தை பெற்றுக் கொடுத்துள்ளது.

சிவகார்த்திகேயன் கேரியரில் முதன்முதலாக இப்படி வசூல் சாதனை செய்த படம் இதுதான். ஆறு நாட்களில் மட்டும் 84 கோடிகள் கலெக்ஷனாகியுள்ளது. இது தமிழ்நாட்டில் மட்டும் தான் இன்னும் இந்த படம் உலக அளவில் என்ன கலெக்சன் என்பது சரியாக தெரியவில்லை.

இப்படி அமரன் படத்துக்கு சற்றும் சளைத்தவன் இல்லை என்பது போல் துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் படமும் பட்டையை கிளப்பி வருகிறது. ஆரம்பத்தில் வெறும் 70 ஸ்கிரீன்களில் மட்டுமே வெளியிடப்பட்ட இந்த படத்திற்கு இப்பொழுது 550 ஸ்கிரீன்கள் வரை கொடுத்துள்ளனர்.

இதுவரை ஆறு நாட்களில் லக்கி பாஸ்கர் படம் வசூலித்தொகை 78 கோடிகள். ஆரம்பத்தில் இந்த படத்திற்கு தமிழில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலம் துல்கர் சல்மானுக்கு டப்பிங் கொடுத்துள்ளனர். பல படங்களில் பிஸியாக வேலை செய்து வரும் துல்கரால் இதற்கு டப்பிங் கொடுக்க முடியவில்லை.

இப்பொழுது இந்த படம் நல்ல வசூலை பெற்று தருவதால் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு துல்கர் வந்து இதற்கு டப்பிங் பேசி கொடுத்துள்ளார். எப்படியும் இந்த இரண்டு படங்களும் இன்னும் ஒரு வாரத்திற்குள் 100 கோடிகள் வசூலை தாண்டி விடும். அமரன் படத்தை எடுத்த கமலின் ராஜ்கமல் நிறுவனம் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளது. அதை போல் லக்கி பாஸ்கர் படம் தயாரித்த சித்தாரா நிறுவனமும் குஷி மூடில் இருக்கிறது.

Leave a Comment