இனி நான் தான் லேடி சூப்பர் ஸ்டார், அதிகாரபூர்வமாய் வெளியான அறிக்கை.. நயனை பப்பி ஷேம் பண்ணிய பிரபல நடிகை

Nayanthara: என்னை இனி யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என நயன்தாரா சமீபத்தில் அறிக்கை விட்டிருந்தார்.

சரி அந்த போஸ்டிங் காலியா தானே இருக்குது இனி அந்த பட்டத்தை நான் உபயோகப்படுத்தி கொள்கிறேன் என அறிக்கை விட்டுவிட்டார் பிரபல நடிகை ஒருவர்.

நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்று கூப்பிட வேண்டாம் என அறிக்கை விட்டபோது அவரை பலரும் கலாய்த்தார்கள். ஆனால் இந்த நடிகை நான் தான் லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லியது எல்லோரும் தங்களுடைய ஆதரவை தெரிவித்து இருக்கிறார்கள்.

நயனை பப்பி ஷேம் பண்ணிய பிரபல நடிகை

பிக் பாஸ் ஏழாவது சீசன் கலந்து கொண்டு பெரிய அளவில் நெகட்டிவ் விமர்சனத்தை சம்பாதித்தவர் மாயா கிருஷ்ணன்.

நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு மாயாவின் அடுத்தடுத்த நகர்வுகள் பெரிய அளவில் ரசிகர்களால் வரவேற்பை பெற்றது.

இதனால் ஒட்டுமொத்த நெகட்டிவிட்டியையும் விரட்டி அடித்து விட்டார் என்று கூட சொல்லலாம். அது மட்டும் இல்லாமல் மஞ்சுளா டீச்சர் என்ற கான்செப்டில் இவர் வெளியிடும் வீடியோக்கள் ரசிகர்களிடையே பெரிய அளவில் பாராட்டைப் பெற்றிருக்கிறது.

இந்த நிலையில் தான் இனி என்னை திரைத்துறையினர் மற்றும் என்னுடைய ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

Maya
Maya

மாயா எதனால் இப்படி ஒரு அறிவிப்பை கொடுத்திருக்கிறார், இதன் பின்னால் வேறு ஏதாவது பிரமோஷன் இருக்கிறதா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment