கொஞ்சம் பிரபலமானதும் கிளாமர் ரூட்டுக்கு போன வாரிசு நடிகை.. மோசமான புகைப்படங்களால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Glamour Post: சினிமாவில் மார்க்கெட் இல்லாத நடிகைகள் தற்போது கவர்ச்சி போட்டோக்கள் வெளியிடுவதில் களம் இறங்கி இருக்கிறார்கள். அப்படி ஒரு வாரிசு நடிகை செய்த வேலையால் ஒட்டுமொத்த சமூக வலைத்தளத்திலும் அவரை வறுத்து எடுத்து வருகின்றனர். எந்த அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் அந்த நடிகைக்கு இருந்ததோ தற்போது ஒரே புகைப்படத்தால் மொத்தமாக கெடுத்துக் கொண்டிருக்கிறார்.

முன்னணி ஹீரோக்கள் ஆன மாதவன் மற்றும் சூர்யாவின் படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற நடிகை தான் ஸ்ருதிகா அர்ஜுன். இந்த படங்களுக்கு பிறகு மொத்தமாக சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்ட இவர், தன்னுடைய சொந்த பிசினஸ் சம்பந்தமாக மீண்டும் சோசியல் மீடியாவுக்கு வந்த பொழுது மறுபடியும் ரசிகர்களால் அடையாளம் காணப்பட்டு அதிக வரவேற்பு பெற்றார்.

இந்த அதிக வரவேற்பு காரணமாக ஸ்ருதிகாவுக்கு குக் வித் கோமாளியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு ரசிகர்கள் கூட்டமும் அதிகமானது. அடுத்தடுத்து விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவர் தன்னுடைய வெளிப்படையான பேச்சு மற்றும் துருதுருப்பான பாவனையால் அனைவரையும் கவர்ந்து இழுத்தார்.

இவருடைய தனித்துவமான குணத்திற்காக பல ரசிகர்களும் இவர் மீது அன்பைப் பொழிந்தனர். ஆனால் ஸ்ருதிகா சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கிளாமரான போட்டோக்களை பதிவிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களின் வெறுப்பையும் சம்பாதித்து இருக்கிறார். புடவையில் போட்டோ எடுக்கிறேன் என்ற பெயரில் தன்னால் முடிந்த வரை எக்கச்சக்க கிளாமரை காட்டியிருக்கிறார் ஸ்ருதிகா.

இதனால் கடுப்படைந்த ரசிகர்கள் வாய்ப்புக்காக இதெல்லாம் பண்ண வேண்டுமா, திருமணத்திற்கு பிறகு இதெல்லாம் தேவையா? என எக்கச்சக்க நெகட்டிவ் கமெண்ட்களை கேட்டிருக்கிறார்கள். அவர் இயல்பாக நினைத்து பண்ணிய ஒன்று தற்போது அவருக்கே ஆப்பாக முடிந்திருக்கிறது.

எம்ஜிஆர் மற்றும் சிவாஜி முன்னணி ஹீரோக்களாக இருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு இணையாக காமெடி மற்றும் வில்லத்தனத்தில் கலக்கிய தேங்காய் சீனிவாசனின் பேத்தி தான் நடிகை ஸ்ருதிகா. தற்போது இவர் இப்படி கிளாமராக போட்டோ சூட் நடத்திக் கொண்டு வருவது அவருடைய பெயரையும் கெடுப்பதாக சினிமா ரசிகர்கள் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.