கெஞ்சாத குறையாக கெஞ்சி விஜய் பட வாய்ப்பு வாங்கிய நடிகர்.. இதை விட்டால் சினிமாவில் வளர வேற வழியில்லை.!

Thalapthy 68 Update: தளபதி விஜய் நடிக்கும் லியோ படத்தில் அவருடைய காட்சிகள் அத்தனையும் படமாக்கப்பட்டு விட்டதாக நேற்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார். இந்த படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீசுக்கு காத்திருக்கிறது. லியோ படத்தின் வேலைகள் முடித்த கையோடு வரும் நவம்பர் மாதம் விஜய் தளபதி 68 படப்பிடிப்பில் கலந்து கொள்ளுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி 68 இயக்குனர் வெங்கட் பிரபு உடன் தான் என்பது மட்டும் தற்போதைக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம் இந்த படத்தின் அப்டேட்கள் எந்த விதத்திலும் லியோவின் ஹைப்பை குறைத்து விடக்கூடாது என்பதில் தளபதி ரொம்பவும் உறுதியாக இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் நடிகை ஜோதிகா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதுபோன்ற விஷயங்கள் படக்குழுவையும் தாண்டி அவ்வப்போது வெளியாகி விடுவதால் இயக்குனர் வெங்கட் பிரபு ரொம்பவும் அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் தற்போது தளபதி 68ல் மற்றும் ஒரு நடிகர் இணைந்திருக்கும் செய்தி வெளியாகி இருக்கிறது. வெங்கட் பிரபுவுடன் இணைந்து சென்னை 28, கோவா போன்ற படங்களில் நடித்த நடிகர் ஜெய் தான் அந்த நடிகர். ஜெய் தற்போது 21 வருடங்கள் கழித்து மீண்டும் தளபதியுடன் இணைகிறார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான பகவதி திரைப்படத்தில் விஜய்யின் தம்பியாக நடித்தவர் தான் ஜெய். அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து சென்னை 28 படத்தில் ரிஎன்ட்ரி கொடுத்த ஜெய்க்கு தமிழ் சினிமாவில் நிறைய நல்ல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் நடிகைகள் உடன் தேவை இல்லாத சகவாசம், குடிப்பழக்கம் என்று மொத்த பெயரையும் கெடுத்துக் கொண்டதால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

இப்போது அடுத்தடுத்து படங்கள் நடித்துக் கொண்டிருந்தாலும் ரசிகர்களிடம் எதுவுமே எடுபடவில்லை. இந்த நேரத்தில்தான் தனக்கு நெருக்கமான இயக்குனர் வெங்கட் பிரபு விஜய்யை இயக்கப் போகிறார் என்று தெரிந்தவுடன் அவரிடம் ரொம்பவும் கெஞ்சி இந்த பட வாய்ப்பு கேட்டிருக்கிறார். இருந்தாலும் விஜய்யை மீறி வெங்கட் பிரபுவால் எதுவும் செய்ய முடியாது என்பதால் ஜெய் நேரிடையாக விஜயிடமே அணுகி இருக்கிறார்.

தளபதியிடமும் கெஞ்சாத குறையாக கெஞ்சி தற்போது பட வாய்ப்பு பெற்று விட்டார். சினிமாவில் ஜெயிக்க இதுதான் சமயம் என்று புரிந்து கொண்ட ஜெய் சரியான நேரத்தில் அதை உபயோகப்படுத்தி இருக்கிறார். நடிகர் அஜித்தின் படத்திலும் நடிப்பதற்கு வாய்ப்புகள் கேட்டு வருவதாக கூட தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் தளபதி 68 இல் ஜெய் இருப்பது ஓரளவுக்கு உறுதியாகிவிட்டது.