விஜய் டிவியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் கடந்த ஆறு சீசன்களாக வெற்றிகரமாக நடத்தி வந்தார். சமீபத்தில் கூட இந்த சீசனின் வெற்றியாளராக அசீம் அறிவிக்கப்பட்டார். இது சில விமர்சனங்களை ஏற்படுத்தினாலும் தற்போது ரசிகர்கள் அடுத்த கட்ட வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
இந்நிலையில் பிக்பாஸ் பிரபலம் ஒருவருக்கு கமல் தயாரிப்பில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதுவரை ஒளிபரப்பான சீசன்களிலேயே ரசிகர்களை மட்டுமல்லாமல் வெறும் குரலால் மட்டுமே அனைவரையும் மிரள விட்ட பிக் பாஸையும் ரசிக்க வைத்த ஒரே சீசன் என்றால் அது சீசன் 3 ஆக மட்டும் தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு அதில் பங்கு பெற்ற போட்டியாளர்கள் நிகழ்ச்சியை கலகலப்பாக வைத்திருந்தனர்.
அதில் முக்கிய பங்கு சாண்டி, கவின், முகேன், தர்ஷன் ஆகியோருக்கு உண்டு. அதில் பங்கேற்ற ஒவ்வொருவரும் தற்போது சினிமாவில் பிஸியாக இருக்கின்றனர். அவ்வளவு ஏன் டான்ஸ் மாஸ்டராக இருந்த சாண்டி கூட லியோ திரைப்படத்தில் நடிகராக பதவி உயர்வு பெற்றிருக்கிறார். அதேபோன்று ஏற்கனவே ஏராளமான ரசிகர்களை வைத்திருந்த கவின் தற்போது வெள்ளி திரையில் படு பிசியாக நடித்து வருகிறார்.
கமல் – கவின்

சமீபத்தில் கூட அவர் நடிப்பில் உருவான டாடா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தற்போது கவின் பற்றிய முக்கிய செய்தி தான் சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. அதாவது சமீபத்தில் இவர் கமல்ஹாசனை சந்தித்தபோது எடுத்துக் கொண்ட போட்டோவை தன் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
இதுதான் இவ்வளவு பரபரப்புக்கும் காரணமாக இருக்கிறது. ஏனென்றால் கமல் தற்போது நடிப்பதை காட்டிலும் தயாரிப்பு பணிகளில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் பிக் பாஸில் கலந்து கொண்ட பல பிரபலங்களுக்கும் இவர் வாய்ப்பு கொடுத்து வருகிறார். அந்த லிஸ்டில் இப்போது கவினும் இணைந்து இருக்கிறார். அதாவது கமல் தயாரிக்க இருக்கும் படத்தில் கவின் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.
கவினுக்கு அடித்த ஜாக்பாட்

அதற்கான பேச்சு வார்த்தைகள் தான் தற்போது நடைபெற்று வருகிறது. எப்போது வேண்டுமானாலும் இதன் அறிவிப்பு வெளிவரவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. இது தான் இப்போது கவினின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மேலும் கவினின் திறமையை கமல் பிக்பாஸில் இருக்கும்போதே பார்த்திருக்கிறார். அதனால் தான் அவர் இப்படி ஒரு வாய்ப்பை அவருக்கு கொடுத்து அவருடைய கேரியருக்கு உதவியுள்ளார். அந்த வகையில் நிச்சயம் இது கவினுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.