தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன்.. பலே பிளான் தான் போங்க!

சமீபகாலமாக தமிழ் நடிகர்கள் இதர மொழிகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் கூட தனுஷ் இரண்டு நேரடி தெலுங்கு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் விஜய் தெலுங்கு தயாரிப்பாளர்களுடன் கூட்டணி அமைக்க உள்ளார். அந்த வரிசையில் தற்போது சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார்.

தெலுங்கில் அனுதீப் இயக்கத்தில் நவீன் பொலிசிட்டி நடிப்பில் வெளியான ஜாதிரத்னலு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. காமெடி திரைப்படமாக உருவாகியிருந்த ஜாதிரத்னலு ஆரம்பித்தது முதல் முடியும் வரை மக்கள் மத்தியில் சிரிப்பலையைத் தொடர செய்தது. இதன் மூலம் அனுதீப் தெலுங்கு வட்டாரத்தில் பிரபலமாகியுள்ளார்.

தற்போது சிவகார்த்திகேயன் இயக்குனர் அனுதீப் உடன் கூட்டணி அமைத்து புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்தப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருப்பதாகவும் ஏசியன் சினிமாஸ் நிறுவனத்தின் நாராயன் தாஸ் நாரங் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

anudeep
anudeep

சிவகார்த்திகேயன் தற்போது நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதை தொடர்ந்து அயலான், டான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களை முடித்த பின்னர் அன்புடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.