பாலிவுட்டின் பிரபல நடிகை அனுஷ்கா சர்மாவை திரையில் பார்த்து கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இறுதியாக 2018ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜீரோ படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. தற்போது தனது கணவர் விராட் கோலி மற்றும் குழந்தை வமிகாவுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜுலான் கோஸ்வாமி வாழ்க்கை வரலாற்று படத்தில் அனுஷ்கா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சோனி பிக்சர்ஸ் நிறுவனம் கடந்தாண்டு ஜனவரி மாதம் இப்படத்தில் அனுஷ்கா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதன் பின்னர் தற்போது வரை எந்த தகவலும் வெளியாகாததால் படம் கைவிடப்பட்டதா என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில் இப்படம் தொடங்கப்பட உள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜூலன் கோஸ்வாமி இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு நட்சத்திர ஆல்ரவுண்டர் ஆவார். மகளிர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்த வீரரும் இவர்தான். இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று வருடங்களுக்குப் பிறகு அனுஷ்கா நடிக்கும் படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.