நடிகை அனுஷ்கா நயன்தாராக்கு முன்பே லேடி சூப்பர் ஸ்டார் என்று பேர் வாங்கியவர். தென்னிந்திய நடிகைகளிலேயே அதிகமான சம்பளம் வாங்கியவர் இவர் தான். நடிகைகள் மீனா, ரம்யா கிருஷ்ணனுக்கு பிறகு சாமி கேரக்டர், ராணி கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தக் கூடியவர். அவர் யோசிக்காமல் எடுத்த முடிவால் இப்போது மொத்த கேரியரையும் தொலைத்து விட்டு இருக்கிறார்.
அனுஷ்கா ஷெட்டி 2005 ஆம் ஆண்டு நாகர்ஜூனாவின் சூப்பர் என்னும் தெலுங்கு படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் இயக்குனர் சுந்தர் சி யின் இரண்டு படம் மூலம் மாதவனுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார். இவர் நடித்த அருந்ததி திரைப்படம் தான் இவருடைய வாழ்க்கையையே மாற்றியது என்று சொல்லலாம்.
அருந்ததியை தொடர்ந்து வேட்டைக்காரன், சிங்கம், தெய்வ திருமகள், சகுனி, என்னை அறிந்தால், ருத்ரமா தேவி, பாகுபலி என அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்தார். பில்லா தெலுங்கு வெர்சனில் நீச்சல் உடையில் மிரட்டி இருப்பார். அப்படி ஒரு சிக்கென உடலமைப்பை கொண்ட அனுஷ்கா ஒரு யோகா பயிற்சியாளர் கூட.
இப்படி தென்னிந்திய சினிமாவையே ஆட்சி செய்த அனுஷ்கா தன்னுடைய கேரியரில் கொஞ்சமும் யோசிக்காமல் எடுத்த முடிவு தான் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தன்னுடைய எடையை அதிகரித்தது. இந்த படத்திற்காக அனுஷ்கா தன்னுடைய எடையில் இருந்து சுமார் 15 முதல் 20 கிலோ ஏற்றினார். அந்த படமும் வெற்றியடையவில்லை அனுஷ்காவுக்கு எடையும் குறையவில்லை.
அதன் பிறகு அப்படியே பட வாய்ப்பு குறைந்த அனுஷ்காவிற்கு பாகுபலி இரண்டில் நடிக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. இந்த படத்தின் போது அனுஷ்காவுக்கும், பிரபாஸிற்கும் இடையில் காதல் என செய்திகள் வெளியாகின, இருவரும் விரைவில் திருமணம் செய்ய போகிறார்கள் என்றெல்லாம் வதந்திகள் வந்தன. ஆனால் அதுவும் கை கூடவில்லை.
பட வாய்ப்புகளும் இல்லை, பிரபாஸுடனான காதலும் கை கொடுக்காத நிலையில் அனுஷ்கா தற்போது துபாயில் செட்டில் ஆகி விட்டாராம். அங்கு அவருடைய யோகா குருவுடன் இருக்கிறாராம். அனுஷ்கா அங்கு யோகா கற்று கொண்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.