பத்து தல, விடுதலை படத்திற்கு வந்த பெரும் சிக்கல்.. நிலைகுலைந்து போன தயாரிப்பாளர்கள்

கடந்த மாதம் பத்து தல, விடுதலை ஆகிய இரு படங்களும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. அதில் பத்து தல திரைப்படம் மார்ச் 30 ஆம் தேதியும், விடுதலை திரைப்படம் அதற்கு மறுநாள் 31 ஆம் தேதியும் வெளியானது. இப்படி ஒரு நாள் இடைவெளியில் வெளியான இந்த இரண்டு படங்களும் இப்போது ஒரே மாதிரியான சிக்கலை சந்தித்துள்ளது.

என்னவென்றால் இந்த இரண்டு திரைப்படங்களும் தற்போது இணையதளத்தில் ஹெச் டி தரத்துடன் லீக்காகி இருக்கிறது. சில காலங்களுக்கு முன்பு வரை திரையுலகம் இப்படி ஒரு சிக்கலை பெருமளவில் சந்தித்தது. அதிலும் படம் ரிலீஸாகி ஒரு சில நாட்களிலேயே இணையதளத்தில் வெளியாகி திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

அதன் பிறகு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இந்த பிரச்சனை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் இந்த பிரச்சனை முற்றிலுமாக முடியவில்லை. அதற்கு உதாரணமாகவே தற்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த வகையில் பத்து தல மற்றும் விடுதலை திரைப்படங்கள் இன்னும் ஓடிடி தளத்திற்கே வரவில்லை.

அதற்குள் இப்படி ஒரு விஷயம் நடந்து தயாரிப்பாளர்களை நிலைகுலைய வைத்திருக்கிறது. ஏனென்றால் பத்து தல திரைப்படத்தை வாங்கி இருக்கும் அமேசான் நிறுவனம் அடுத்த மாதம் தான் அதை வெளியிட முடிவு செய்திருக்கிறது. அதேபோன்று விடுதலை திரைப்படத்தை வாங்கி உள்ள ஜீ5 தளமும் ஜூன் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இணையத்தில் வெளியாகி இருக்கும் இந்த இரண்டு படங்களும் ரசிகர்களால் அதிக அளவில் டவுன்லோட் செய்யப்பட்டு வருகிறது. இது தயாரிப்பாளர்களுக்கு மட்டுமல்லாமல் படத்தை வாங்கிய ஓடிடி உரிமையாளர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதான் இப்போது பரபரப்பு செய்தியாக பேசப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பத்து தல திரைப்படம் வெளியான இந்த இரண்டு வாரங்களில் 50 கோடி வரை வசூல் லாபம் பார்த்து தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. அதேபோன்று விடுதலை படமும் 30 கோடி வரை வசூல் லாபம் பார்த்துள்ளது. இந்நிலையில் புதிதாக முளைத்திருக்கும் இந்த சிக்கலால் வசூல் பாதிக்கும் என்ற கவலையில் தயாரிப்பாளர்கள் இருக்கின்றனர்.