Sivakarthikeyan: ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் கூட்டணியின் மதராஸி செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வருகிறது. சத்தம் இல்லாமல் படத்தை முடித்துவிட்டு இப்போது பிரமோஷன் வேலையில் பிஸியாக இருக்கிறார் இயக்குனர்.
அடுத்தடுத்து அப்டேட் கொடுத்து ஆர்வத்தை உருவாக்காமல் இருப்பதாலேயே படம் மீது தனி கவனம் இருக்கிறது. நாளை படத்தின் முதல் சிங்கிள் வெளியாக இருக்கும் நிலையில் ஏ ஆர் முருகதாஸின் பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.
அதில் அவரிடம் மான் கராத்தே படத்தில் பார்த்த சிவகார்த்திகேயனுக்கும் இப்போது இருப்பவருக்கும் என்ன வித்தியாசம் என்று கேள்வி கேட்கப்பட்டது. மான்கராத்தே படத்தின் கதையை எழுதியது ஏ ஆர் முருகதாஸ் தான்.
மான் கராத்தே to மதராஸி
தயாரிப்பாளரும் அவர்தான் என்பதால் இந்த கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் மான்கராத்தே படம் பண்ணும் போது சிவகார்த்திகேயன் டிவியிலிருந்து வந்த ஒரு நடிகராக தெரிந்தார். அப்போதே அவர் ஆறு ஏழு படம் பண்ணி விட்டார்.
இப்போது அவருடைய வளர்ச்சி பிரமிப்பாக இருக்கிறது. பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார். அவரைப் பார்த்து தான் பலர் சின்னத்திரையில் இருந்து வந்து சாதிக்க தொடங்கி இருக்கின்றனர்.
அவருடைய வளர்ச்சிக்கு திறமையும் விடாமுயற்சியும் தான் காரணம். இந்த இடைப்பட்ட காலத்தில் சிவகார்த்திகேயனின் முன்னேற்றம் பாஸிட்டிவாக மட்டுமின்றி விரைவில் உயரத்தை எட்டிவிட்டார் என பாராட்டியுள்ளார்.
உண்மையில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அப்படித்தான் இருக்கிறது. அதனாலேயே அவர் மீது பொறாமை கொண்டு சிலர் நெகட்டிவ் விஷயத்தையும் பரப்புகின்றனர். ஆனால் அவர் தன்னுடைய முன்னேற்றத்தில் மட்டுமே கவனமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.