நிக்சனுக்கு எதிராக அர்ச்சனா கையில் எடுத்த ஆயுதம்.. குள்ளநரித்தனத்தை தோலுரித்த ஆண்டவர்

Biggboss 7: இன்றைய பிக்பாஸ் ப்ரோமோக்கள் அடுத்தடுத்து வெளியாகி ஷாக் கொடுத்து வருகிறது. அதை எல்லாம் பார்க்கும்போது இப்பதான் மனசுல இருக்குற பாரமே குறைந்தது என்ற ஃபீல் கிடைக்கிறது. அந்த அளவுக்கு ஆண்டவர் பழைய ஃபார்முக்கு வந்து ஒருத்தரையும் விடாமல் வச்சு செய்து இருக்கிறார்.

அதன்படி கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட சர்ச்சைகள் நடந்தது. அதில் அர்ச்சனா, வினுஷா விஷயத்தை கையில் எடுத்து நிக்சனை தூண்டிவிட்டார். அதன் வெளிப்பாடுதான் அவர் என்ன பேசுறோம் என்று தெரியாமல் வார்த்தையை விட்டது. அது மிகப் பெரிய தவறு தான் என்றாலும் மூல காரணம் என்று பார்த்தால் அது அர்ச்சனா தான்.

இப்படி சர்ச்சைக்கு காரணமான அவர் இன்று உரிமை குரல் தூக்கி இருக்கிறார். அதற்கு கமல் நியாயம் சேர்த்தாலும் அர்ச்சனாவின் தவறையும் சுட்டிக்காட்ட தவறவில்லை. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் வினுஷா, ஐசு இருவர் விவகாரத்தையும் அடிக்கடி அவர் பேசுவதை பற்றி கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

இல்லாத இருவரின் பெயரை ஜோக்கர் போல் உங்கள் கேமுக்கு பயன்படுத்தாதீர்கள். நிக்சன் மன்னிப்பு கேட்ட பிறகும் கூட மீண்டும் இதை ஆரம்பித்தது எதற்கு? அதுக்கு பதில் உப்புமா நல்லா இருந்தால் அதையே சாப்பிட்டு இருக்கலாமே என சாட்டையடி கேள்வியை கேட்டு அர்ச்சனாவை வாயடைக்க வைத்துள்ளார்.

உண்மையில் அர்ச்சனா தன்னுடைய கேமிற்காகவும் பார்வையாளர்களின் ஆதரவுக்காகவும் பல விஷயங்களை செய்து வருகிறார். அதற்கு பகடை காயாக பிரதீப், வினுஷா, ஐசு ஆகியோருக்கு வக்காலத்து வாங்குவது போல் திரைக்கதை அமைக்கிறார்.

தேவையான நேரத்தில் அவர்களின் பெயர்களை உபயோகப்படுத்தும் இவருடைய குள்ளநரி தனத்தை தற்போது ஆண்டவர் தோலுரித்துக் காட்டியிருக்கிறார். உண்மையில் இந்த விவகாரத்தில் அர்ச்சனாவுக்கும் மஞ்சள் கார்டு கொடுத்திருக்க வேண்டும். ஏனென்றால் வினுஷா மறக்க நினைக்கும் விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்லி தனக்கு சாதகமாக்கிக் கொள்வதும் பெரிய குற்றம் தான்.