ஆக்சன் கிங் அர்ஜுன் தனக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பின்னி பெடல் எடுப்பார். அதாவது ஹீரோ, ஆன்டி ஹீரோ, வில்லன் என எல்லா கேரக்டர்களிலும் நடித்த அசத்தியுள்ளார். இவருக்கென்றே தனி ரசிகர் கூட்டம் ஒன்று உள்ளது. இந்நிலையில் தொகுப்பாளராகவும் அர்ஜுன் சிறந்து விளங்கியுள்ளார்.
அர்ஜுனின் முதல்வன், ஜென்டில்மேன் போன்ற பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் 1993 இல் வெளியான ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளனர். இப்படத்தின் தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் சமீபத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஆனால் தற்போது ஷங்கர் இந்தியன் 2, ராம்சரண் படம் என பிசியாக உள்ளார். இதனால் விஷ்ணுவர்தனின் இணை இயக்குனர் கோகுல கிருஷ்ணா இப்படத்தை இயக்க உள்ளார். மேலும் சமீபத்தில் நயன்தாரா என்ற புதுமுக நடிகை இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் ஜென்டில்மேன் 2 படத்தின் ஹீரோ யார் என்பது தற்போது வெளியாகி உள்ளது. குஞ்சுமோன் பணரீதியாக மிகுந்த கஷ்டத்தில் உள்ளார். இதனால் அர்ஜுன் எதிர்பார்க்கும் அளவிற்கு இவரால் சம்பளம் கொடுக்க முடியாது. ஆகையால் அர்ஜுன் இப்படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்து விட்டார்.
இதனால் குஞ்சுமோன் யாருக்கும் பெரிய அளவில் அறிமுகம் இல்லாத ஒரு நடிகரை ஜென்டில்மேன் 2 படத்திற்கு தேர்வு செய்துள்ளார். அதாவது தெலுங்கு சினிமாவில் இளம் நாயகனான சேத்தன் சீனு என்பவரை தேர்வு செய்துள்ளார். இவர் தமிழில் அஞ்சலிக்கு ஜோடியாக கருங்காலி என்ற படத்தில் நடித்திருந்தார்.
மேலும் தமிழில் சில சின்னத்திரை தொடர்களிலும் சேத்தன் சீனு நடித்துள்ளார். ஜென்டில்மேன் 2 படத்தில் பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீராவானி இசையமைக்கிறார். மிக விரைவில் ஜென்டில்மேன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.