பூசணிக்கா வாங்குங்கப்பா.. ஆள விடுங்கடா சாமி! என தலைதெறிக்க ஓடிய கமல்

உலக நாயகன் கமலஹாசனின் விஸ்வரூபம் 2 படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. அதன் பிறகு கமலின் படங்கள் எதுவும் வெளியாகாததால் அவரின் ரசிகர்கள் மிகுந்த மனவேதனையில் இருந்தனர். அரசியல் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமலை பார்த்தாலும் அவர் படம் வெளி ஆகாதது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.

இந்நிலையில் கமல் நடித்து வரும் விக்ரம் படம் இறுதிக் கட்ட படப்பிடிப்பிற்கு நெருங்கியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் விக்ரம். இவர்களுடன் நரேன், காளிதாஸ் ஜெயராம், ஆண்டனி வர்கீஸ், ஷிவானி நாராயணன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

விக்ரம் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு போட்டதால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. அதன் பிறகு கமல் அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாலும், கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாலும் சில காலம் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் பல தடைகள் தாண்டி விக்ரம் படம் முடிவுக்கு வந்துள்ளது. இன்னும் கடைசி ஏழு நாட்கள் மட்டும் படப்பிடிப்பு உள்ளதாம். அதையும் ஐந்து நாளிலேயே முடிக்க விக்ரம் படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இதனால் கூடிய விரைவில் கோடை விடுமுறையில் விக்ரம் படம் வெளியாக வாய்ப்புள்ளது.

விக்ரம் படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு அடுத்த படத்தில் கமல் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கப்பட்ட நிலையில் மீண்டும் இப்படத்தில் கமல் நடிக்க உள்ளாரா அல்லது புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என்பது தெரியவில்லை.