அயலானால் தலையில் துண்டை போட்ட விநியோகஸ்தர்.. கொட்டிக் கொடுத்த தனுஷ்

Ayalaan – Dhanush : இந்த பொங்கல் பண்டிகைக்கு தித்திக்கும் கரும்பாக நான்கு வருடங்களாக கிடப்பில் கிடந்த சிவகார்த்திகேயனின் அயலான் படத்தை வெளியிட்டனர். அதுவும் தனுஷின் கேப்டன் மில்லர் படத்திற்கு போட்டியாக அயலானை சிவகார்த்திகேயன் மோத விட்டிருந்தார்.

அதன்படி தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அயலான் படம் நல்ல வசூலை பெற்றதாகும் தயாரிப்பு தரப்பில் இருந்து தகவல் வந்தது. ஆனால் கேரளாவில் அயலான் படத்தை விநியோகஸ்தர் 75 லட்சத்திற்கு வாங்கி இருக்கிறார். இது தவிர படத்தை பிரமோஷன் செய்வது, போஸ்டர் அடிப்பது என எக்கச்சக்க செலவு ஆகியிருக்கிறது.

மேலும் கேரளாவில் கிட்டத்தட்ட 103 தியேட்டரில் அயலான் படத்தை ரிலீஸ் செய்து இருக்கின்றனர். ஆனால் தியேட்டர் எல்லாம் வெறிச்சோடி தான் காணப்படுகிறது. கேரளாவில் அயலான் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து இருக்கிறது. இதனால் விநியோகத்திற்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது.

இதுவே கேப்டன் மில்லர் படம் கேரளாவின் சக்கை போடு போட்டு வருகிறது. அதாவது தனுசுக்கு எல்லா மொழிகளிலுமே ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் கேரளாவில் 2 கோடி கொடுத்து கேப்டன் மில்லர் படத்தை வாங்கி இருந்தனர். அதுவும் 189 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டது.

படம் வெளியான நான்கு நாட்களிலேயே கிட்டத்தட்ட மூன்று கோடி கலெக்ஷன் செய்துள்ளதாம். தனுஷ் படத்தால் இப்போது கேரளாவில் கேப்டன் பில்லா படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறாராம். ஏற்கனவே ஒரு கோடி லாபம் பார்த்த நிலையில் இனி வரும் வசூல் எல்லாமே அதிகப்படியான லாபத்தை தான் கொடுக்கப் போகிறது.