Actor Kamal: கமலின் பல காதல் விளையாட்டுகளை அவிழ்த்து விட்டுள்ளார் பயில்வான். இந்நிலையில் இப்போது கமலின் டார்ச்சரினால் ஒரு நடிகை சினிமாவே வேண்டாம் என்று ஓடியதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அதாவது உலகநாயகன் கமல் குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.
அவரது சினிமா வாழ்க்கையில் எவ்வளவு சர்ச்சை இருந்ததோ அதேபோல் சொந்த வாழ்க்கையிலும் பல சர்ச்சைகளை சந்தித்துள்ளார். அதிலும் அவரது திருமண வாழ்க்கையே எடுத்துக் கொள்ளலாம். முதலில் வாணி கணபதியை திருமணம் செய்து கொண்ட கமல் சில கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து நடிகை சரிகாவை கல்யாணம் செய்தார்.
இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் அவரையும் விவாகரத்து செய்துவிட்டு நடிகை கௌதமியுடன் சில காலம் வசித்து வந்தார். கொஞ்ச நாளில் அதுவும் புளித்து போக இப்போது தனிமையாக இருந்து வருகிறார். இந்த சூழலில் கமலுடன் நடிக்க வேண்டும் என்று அந்த காலத்தில் பல நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர்.
அப்படிதான் விருமாண்டி படத்தில் கமலுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்திருப்பார் நடிகை அபிராமி. ஆனால் அந்த படத்துடன் இவர்களது உறவு முடியாமல் கமல் அபிராமிக்கு மிகுந்த டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். பொதுவாக சில நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் என்றால் கூட பொறுத்துக் கொண்டு சினிமாவில் நடிப்பார்கள்.
ஆனால் கமல் கொடுத்த டார்ச்சரின் காரணமாக சினிமாவே வேண்டாம் என அபிராமி ஓட்டம் கண்டு விட்டாராம். அதன் பிறகு வெளிநாட்டில் செட்டில் ஆகி இருந்த அபிராமி சில காலம் கழித்து இப்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். அதன்படி ஜோதிகாவின் 36 வயதினிலே படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் அப்போது கமல் இல்லை என்றால் அபிராமி சினிமாவில் நல்ல நிலைமையில் இருந்திருப்பார் என்று பயில்வான் கூறியிருக்கிறார். கமலால் சினிமாவையே அபிராமி வெறுத்தாரா என்ற செய்தி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனாலும் அபிராமி மிகவும் துணிச்சலான நடிகை என்பது அவரது கதாபாத்திரங்களிலேயே எல்லோருக்கும் தெரியும்.