கமலின் சூப்பர் ஹிட் படத்தை இயக்க மறுத்த பாலச்சந்தர்.. பிரிவியூ ஷோ பார்த்துட்டு இளையராஜா விட்ட சபதம்

சினிமாவை வித்தியாசமான கோணத்தில் பார்க்கக்கூடிய உலக நாயகன் கமலஹாசன் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் புது புது தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது மட்டுமல்லாமல் சினிமாவிற்காக தனியே அர்ப்பணித்துள்ளார்.

இப்படிப்பட்ட கலை தாகம் மிக்க கமலஹாசன் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படத்தை கே பாலச்சந்தர் இயக்க மறுத்ததாகவும், ஆனால் அந்தப் படத்தின் பிரிவியூ ஷோவை பார்த்துவிட்டு இசைஞானி இளையராஜா சபதம் செய்திருக்கும் சுவாரசியமான தகவல் தற்போது ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

அதாவது 1989 ஆம் ஆண்டு சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் தமிழில் வெளியான மசாலா திரைப்படம் தான் அபூர்வ சகோதரர்கள். இந்தப் படத்தில் கமலஹாசன் சேதுபதி, ராஜா, அப்பு என்று மூன்று வேடங்களில் அட்டகாசமாக நடித்திருப்பார். அதிலும் அப்புவாக குள்ளமாக நடித்து குழந்தைகள் முதல் பெரியவர்களையும் அசர வைத்திருப்பார்

மேலும் கமலஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த படம், வசூல் ரீதியாக பட்டையைக் கிளப்பியது மட்டுமல்லாமல் ஏகப்பட்ட விருதுகளையும் வாங்கி குவித்தது. இருப்பினும் அபூர்வ சகோதரர்கள் படம் வெளிவருவதற்கு முன்னர் பலர் கேலியாகப் பேசி வந்தனர்.

இந்த படத்தை ஆரம்பித்த கமல், பாலச்சந்தரிடம் இயக்க சொல்லி கேட்டுள்ளார் பாலச்சந்தர் கதையை கேட்டு பயந்து வேண்டாம் என்றார். அடுத்ததாக சிங்கீதம் சீனிவாசராவ் இடம் சென்று படத்தின் கதையை சொல்லி வியக்க வைத்தார். உடனே அவரும் அந்தப் படத்தை இயக்க ஒப்புக் கொண்டார்.

படம் ஆரம்பித்த கொஞ்சநாளில் அவரும் பயந்து, பின்னர் பஞ்சு அருணாச்சலம் கதை எழுதி கமலுடன் சேர்ந்து இருவரும் எப்படியோ படத்தை முடித்து விட்டனர். படம் வருவதற்கு முன் இந்த படத்தை பார்த்த இளையராஜா இந்த படம் ஓடவில்லை என்றால், நான் இனிமேல் இசையமைப்பதை நிறுத்தி விடுவேன் என்று நம்பிக்கையுடன் ஆவேசமாக கூறினார்.