பரிசு தொகை, சம்பளம் என பாலாவை பண மழையில் குளிப்பாட்டிய சிம்பு.. நிரூப், ரம்யா பாண்டியன் சம்பளம்

ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. 70 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் அமோக ஆதரவோடு அதிக ஓட்டுகளை பெற்று பாலாஜி முருகதாஸ் பிக்பாஸ் டைட்டிலை வென்றார்.

நேற்று நடிகர் சிம்பு பாலாஜி வெற்றி பெற்றதாக அறிவித்து அவருக்கு பரிசுக் கோப்பையை வழங்கினார். அத்துடன் சுமார் 35 லட்சம் மதிப்புள்ள காசோலையையும் வழங்கினார். தற்போது அவருக்கு சக போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பாலாஜிக்கு அடுத்தபடியாக 2 வது இடத்தை நிரூப் பிடித்துள்ளார். அதற்கு அடுத்த மூன்று மற்றும் நான்காவது இடங்களை ரம்யா பாண்டியன் மற்றும் தாமரை ஆகிய இருவரும் பிடித்தனர். தற்போது பிக்பாஸ் வீட்டில் 70 நாட்கள் வரை இருந்த இவர்களுக்கான சம்பள விவரம் தெரியவந்துள்ளது.

அதில் பாலாஜிக்கு ஒரு நாளைக்கு இருபத்தி ஐந்தாயிரம் சம்பளம் பேசப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் 70 நாட்கள் வீட்டுக்குள் இருந்த அவருக்கு 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கிடைத்திருக்கிறது. அதோடு இந்த 35 லட்சமும் சேர்த்து அவர் 52 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளார்.

அதற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தை பிடித்த நிரூப்புக்கு 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கிடைத்துள்ளது. அதை அடுத்து மூன்றாவது இடத்தை பிடித்த ரம்யா பாண்டியனுக்கான சம்பளத் தொகை மட்டும் ரகசியமாகவே இருக்கிறது. கடந்த பிக் பாஸ் சீசனில் இவருக்கு ஒரு வாரத்துக்கு இரண்டு லட்ச ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டது.

அதை வைத்து பார்க்கும்போது இந்த நிகழ்ச்சியில் அவர் நிச்சயம் அதை விட அதிக சம்பளம் தான் பெற்றிருப்பார் என்று தெரிகிறது. சொல்லப்போனால் இந்த மூன்றாவது இடத்திற்கு ஜூலி தான் நிச்சயம் பொருத்தமாக இருந்திருப்பார். விஜய் டிவியின் வேலையால் தான் ரம்யா பாண்டியன் இந்த அளவுக்கு வந்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதற்கு அடுத்த இடத்தைப் பிடித்த தாமரைக்கு வாரத்திற்கு 80 ஆயிரம் சம்பளம் விகிதம் எட்டு லட்ச ரூபாய் சம்பளமாக கிடைத்துள்ளது. இதில் அவர்களுக்கான வருமான வரி பிடித்தம் போக மீதித் தொகை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.