Bayilwan Ranganathan: 90களின் காலகட்டத்தில் அடியாள் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த பயில்வான் ரங்கநாதன் சமீப காலமாக மீடியாவில் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் பொது வாழ்க்கையை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் என்ற பெயரில் தேவை இல்லாமல் வம்பு இழுத்துக் கொண்டிருக்கிறார். இவர் சொல்லும் செய்திக்காக ஒரு சிலரே இவரை ரசித்தாலும், பலரும் இவருக்கு நெகட்டிவ் கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள்.
பலரும் நெகட்டிவ் கமெண்ட்களில் இவரை திட்டி தீர்த்தும் அதையெல்லாம் பொருட்படுத்தாத இவர் தொடர்ந்து தன் வேலையை செய்து வருகிறார். இதனால் பொதுமக்கள் மட்டுமல்லாது சினிமா பிரபலங்களும் இவருக்கு எதிராக பேசி வருகிறார்கள். சமீபத்தில் விஜய் டிவியில் வேலை பார்க்கும் நடிகை ஒருவரை வம்பு இழுத்து இருக்கிறார் இவர்.
சமீபத்தில் சின்னத்திரை கலைஞர்களும் தொடர்ந்து தங்கள் திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டு விவாகரத்து செய்து வருகிறார்கள். இதில் விஜய் டிவியின் தொகுப்பாளர்களும் அதிகம் அடங்குவார்கள். அப்படி விவாகரத்து செய்து கொண்ட விஜய் டிவி நடிகை ஒருவரை பற்றி தான் பயில்வான் ரங்கநாதன் தற்போது பேசி இருக்கிறார்.
தன்னுடைய வித்தியாசமான வர்ணனை திறமையால் இன்றுவரை தொகுப்பாளினிகளில் முதலிடத்தில் இருப்பவர் தான் டிடி என்னும் திவ்யதர்ஷினி. இவர் சில வருடங்களுக்கு முன்னால் தன்னுடைய நீண்ட கால நண்பர் என்று சொல்லி கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஒரே வருடத்தில் இவர்கள் விவாகரத்தும் பெற்றனர்.
பயில்வான் ரங்கநாதன் டிடி பற்றி பேசுகையில், திவ்யதர்ஷினி திருமணம் செய்து கொண்டது வெறும் உடல் தேவைக்காக மட்டும்தான். மற்றபடி அவருக்கு தன் கணவர் மீது எந்த காதலும் கிடையாது. உடல் தேவை தீர்ந்தவுடன் அவரை கழட்டி விட்டு விட்டு விவாகரத்து செய்து விட்டார் என பேசி இருக்கிறார்.
டிடி திருமணமாகி ஒரு சில மாதங்களிலேயே மூட்டு பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் இருந்தார். இப்போதும் ஸ்டிக் உதவியுடனும், மற்றவர்களின் உதவியுடனும் தான் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இன்னும் அந்த நோயில் இருந்து அவர் முழுதாக மீளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.