நான் அப்படிப்பட்ட காம கோளாறு கிடையாது.. முதல்முறையாக வெளிவந்து ரகசியத்தை உடைத்த அசல்

கடந்த மாதம் தொடங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 6 வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த சீசன்களை எல்லாம் ஒப்பிட்டு பார்க்கும் போது, பல பிரபலங்கள் இதில் கலந்து கொள்வதற்கு முன் இருந்த நல்ல பெயரை கெடுத்து கொள்கிறார்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் ஜுலி, மகத், வனிதா விஜயகுமார், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா ஆகியோரை சொல்லலாம். இப்போது இந்த லிஸ்டில் சேர்ந்திருப்பவர் தான் ஆறாவது சீசன் போட்டியாளர் அசல் கோளாறு .

வசந்த குமார் என்ற அசல் கானா பாடல் மூலமாக பிரபலமடைந்தவர். ‘ஜோர்த்தாலே’ என்ற படாலின் மூலம் பட்டிதொட்டியெங்கும் ரீச் ஆன அசல், யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இசையில் காஃபி வித் காதல், குலு குலு, மகான் படங்களுக்கு பாடல் வரிகளை எழுதியுள்ளார். மேலும் ஜி வி பிரகாஷின் பேச்சுலர் படத்திற்கும் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

இப்படி நல்ல ரீச்சில் இருந்த இவர் பிக்பாஸினுள் வந்து மொத்தமாக தன்னுடைய பெயரை கெடுத்துக்கொண்டார். பெண்களிடம் சகஜமாக பழகுகிறேன் என்ற பெயரில் பெண்களை தொடுவது, கிள்ளுவது, கட்டியணைப்பது என எல்லை மீறி போனார். இதனால் நெட்டிசன்கள் பயங்கரமாக இவரை கலாய்க்க தொடங்கினார். திருமணமான மைனா நந்தினி, மஹாலக்ஷ்மி, மகேஸ்வரியை கூட அசல் விட்டு வைக்கவில்லை என ட்ரோல் செய்தனர்.

இதன் விளைவாக அசல் குறைந்த ஓட்டுக்களை மட்டுமே பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு கடந்த வாரம் வெளியேறி இருக்கிறார். இவர் வெளியே வந்ததும் முதன் முதலாக பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் நான் செய்தது மிகப்பெரிய தவறு எனவும், எல்லோரும் என்னை மன்னிக்க வேண்டும் எனவும் கூறியிருக்கிறார். நெட்டிசன்கள் ட்ரோல் செய்வது மாதிரியான ஆள் நான் இல்லை எனவும் கூறியிருக்கிறார்.

மேலும் பேசிய அவர், பெண்களை தான் எந்த தவறான எண்ணத்திலும் தொடவில்லை எனவும், சிறு வயதிலிருந்தே மற்றவர்களிடம் எப்படி பழகுவேனோ அப்படி தான் பிக்பாஸ் வீட்டில் பழகினேன் என்றும் கூறியிருக்கார். சொந்தக்காரர்கள் வீட்டுக்கு போனால் சக பெண்களிடம் எப்படி பழகுவேனோ அப்படி தான் இவர்களிடம் பழகினேன் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

நிஜமாகவே நான் தவறாக பழகியிருந்தால் அந்த பெண்களே என் மீது புகார் கொடுத்து இருப்பார்கள், அனால் அப்படி யாரும் புகார் அளிக்கவில்லை என்று கூறினார். பிக்பாஸ் வீட்டில் நான் செய்தது எதுவும் இதுவரை எனக்கு தவறாக தெரியவில்லை, இருந்தாலும் மற்றவர்களுக்கு தவறாக தெரிவதால் கண்டிப்பாக இந்த விஷயத்தை நான் மாற்றி கொள்கிறேன் என்று மனம் வருந்தி பேசியிருக்கிறார்.