Simbu : நடிகர் சிம்பு அவர்கள் குழந்தை நட்சத்திரமாக இருந்ததிலேர்ந்தே தமிழ் சினிமா துறையில் நடித்து ஜொலித்து கொண்டிருக்கிறார். இடையில் சில படங்கள் தோல்வியை சந்தித்தாலும், பிறகு இருந்த இடம் தெரியால் இருந்து வந்தார் என அனைவராலும் கேலிக்கு உள்ளாகி இருந்தார்.
ஆனால் இவரது “கம்பேக்” என்பது யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் அமைந்தது. “பத்து தல” படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதிலிருந்து அவர் தேர்வு செய்யும் கதைக்களம் அனைத்துமே அவரை வேறு ஒரு கோணத்தில் நம்மை ரசிக்கவைக்கிறது.
இவ்வாறு இருக்கையில் தற்போது வெளிவந்து மக்களிடையில் நல்ல வரவேற்பை பெற்ற “லெவன்” படம். இதில் இரட்டையர்களை வைத்து படத்தை மிரட்டியிருப்பர் இயக்குனர். இதில் நடித்த இரட்டையர்களுமே நிஜ இரட்டையர்கள் என்பது மேலும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது .
சிம்புவுக்காக எழுதுன பெஞ்சமின் கதை..
இதற்கு அடுத்ததாக “லெவன்” படம் வெளியாகி நடிப்பில் அசத்தியுள்ளார் ஹீரோ. ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் படம் அருமையாக உள்ளது என மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் “லெவன்” படத்தை இயக்குனர் லோகேஷ் அஜில்ஸ் அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது அவர் “லெவன்” படத்தின் கதாநாயகனாக நடிகர் சிம்பு அவர்களை தேர்வு செய்து வைத்திருந்ததாகவும், சிம்புவுக்காக தான் இந்த பெஞ்சமின் கதையை எழுதினேன் எனவும் கூறியுள்ளார். இந்த படத்தில் அவர் நடித்திருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன் எனவும் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
“லெவன்” படத்தின் கதைக்களம் நன்றாக உள்ளது. இயக்கிய விதமும் அருமையாக இருந்ததது. அனைத்தும் கச்சிதமாக அமைந்த சீரியல் கில்லர், திரில்லர் படம் என்ற கூறலாம். ஆகையால் கதாநாயகனாக சிம்பு அவர்கள் நடித்திருந்தாலும் கூட இந்த படம் வெற்றியடைந்திருக்கும் என தெளிவாக தெரிகிறது.