Director Bharathiraja: இயக்குனர் பாரதிராஜா தமிழ் சினிமாவுக்கு பல திறமையான நடிகர்கள் மற்றும் நடிகைகளை அறிமுகப்படுத்தியவர். இவர் அறிமுகப்படுத்திய அத்தனை பேரும் இன்று அவர் பெயர் சொல்லும் அளவுக்கு சினிமாவில் பிரபலமாக இருக்கிறார்கள். இதில் ஒரு சிலரே சினிமா கை கொடுக்காமல் தோற்றுப் போய் இருக்கிறார்கள். அந்த லிஸ்டில் ஒருவர் தான் காதல் ஓவியம் பட ஹீரோ கண்ணன்.
பாரதிராஜா இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன படம்தான் காதல் ஓவியம். இதில் ராதா ஹீரோயினாக நடித்திருந்தார். கண்ணன் ஹீரோவாக அறிமுகம் ஆகி இருந்தார். கதைப்படி பார்வையற்றவராக இவர் அதில் நடித்திருந்தார். நல்ல ஒரு காதல் கதையை மையமாகக் கொண்டுதான் இந்த படம் எடுக்கப்பட்டது. இளையராஜாவின் இசையில் அத்தனை பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
எப்போதுமே பாடல்கள் ஹிட் அடித்து விட்டால், படம் வெற்றி என்பதுதான் அப்போதைய தமிழ் சினிமாவின் எழுதப்படாத இலக்கணமாக இருந்தது. ஆனால் இந்த படம், பாடல்கள் வெற்றியடைந்த போதும் படு தோல்வியை சந்தித்தது. இது இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு மிகப்பெரிய சருக்கலை ஏற்படுத்தியது. படத்தின் தோல்விக்கு முழு காரணம் ஹீரோ கண்ணன் தான் என அப்போது பேசப்பட்டது.
காதல் ஓவியம் படத்திற்கு பிறகு கண்ணன், மொத்தமாக சினிமாவை விட்டு விலகி விட்டார். அவர் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாமல் இருந்தது. சமீபத்தில் அவருடைய தகவல்கள் வெளியாகியதோடு, புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு பயங்கரமாக வைரல் ஆகி வருகிறது. காதல் ஓவியம் படத்தில் நடித்த கண்ணனா இவர் என அனைவரும் அந்த புகைப்படத்தை ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.
காதல் ஓவியம் பட ஹீரோ கண்ணன்

கண்ணன் பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக இந்தியாவிற்கு வந்த குடும்பத்தை சேர்ந்தவராம். இவர் பெங்காலி படத்தில் நடிக்க முயற்சி செய்து கொண்டிருந்த பொழுதுதான், தமிழில் காதல் ஓவியம் படம் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவருடைய உண்மையான பெயர் சுனில் கிருபாளினி ஆகும். காதல் ஓவியம் படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தி இருந்தார்.
காதல் ஓவியம் படத்தில் பார்வையற்றவராக நடித்தது தான், தன்னுடைய சினிமா தோல்விக்கு முக்கிய காரணம் என கண்ணன் அவருடைய பேட்டியில் சொல்லி இருக்கிறார். அந்த படத்திற்குப் பிறகு வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டதாகவும், தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகி இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்.