இரங்கல் தெரிவித்தால் கடமை முடிந்ததா.? தூக்கிவிட்ட தயாரிப்பாளரின் மரணத்தை கண்டு கொள்ளாத பாரதிராஜா, கமல்

Kamal-Bharathiraja: சோசியல் மீடியாக்கள் பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் எவ்வளவு தான் துயர சம்பவமாக இருந்தாலும் பிரபலங்கள் ஒரே ஒரு பதிவை போட்டுவிட்டு தங்கள் வேலையை பார்க்க சென்று விடுகின்றனர். அப்படித்தான் தூக்கி விட்ட தயாரிப்பாளரின் மரணத்தை பாரதிராஜா, கமல் இருவரும் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதாவது பிரபல தயாரிப்பாளர் ராஜ்கண்ணு நேற்று உடல் நல குறைவின் காரணமாக மரணம் அடைந்தார். இவர் 16 வயதினிலே, மகாநதி, கிழக்கே போகும் ரயில் உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். அப்படி பார்த்தால் பாரதிராஜாவை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சேரும்.

அதேபோன்று கமலுக்கு சப்பானி கதாபாத்திரமும் இன்று வரை ஒரு அடையாளமாக இருக்கிறது. இப்படி இவர் தூக்கி விட்ட பிரபலங்கள் பலர் இருக்கின்றனர். ஆனால் இவர் இறந்த பிறகு அவருடைய உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்றவர்கள் என பார்த்தால் 20 பேர் கூட கிடையாதாம்.

இதுதான் தற்போது அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் இறுதி காலத்தில் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு இருந்திருக்கிறார். அவருக்கு நடிகர் ராஜேஷ், ராதிகா உள்ளிட்ட வெகு சிலர் மட்டுமே உதவி செய்திருக்கின்றனர். இதுதான் மிகவும் வருந்தத்தக்க விஷயமாக இருக்கிறது.

இன்று மிகப்பெரும் ஜாம்பவான்களாக இருக்கும் பலருக்கும் முகவரியை கொடுத்த தயாரிப்பாளரின் மரணத்தை அவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அந்த வகையில் கமல் நேற்று இவரின் மரணத்தை அறிந்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கல் ஒன்றை தெரிவித்து இருந்தார்.

வழக்கமாக அவர் இது போன்ற பிரபலங்களின் மரணத்திற்கு முதல் ஆளாக வந்து இரங்கல் பதிவை போட்டு விடுவார். ஆனால் இறுதி அஞ்சலிக்கு நேரில் செல்ல மாட்டார் என்ற புகார் நீண்ட காலமாகவே இருக்கிறது. அந்த வகையில் தற்போது பாரதிராஜா, கமல் இருவரும் இந்த தயாரிப்பாளருக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தாதது பெரும் விவாதமாக மாறி இருக்கிறது.