ஆண்டவரையே கதற விட்ட பசுக்கள் கூட்டம்.. ஜிங்ஜாங் போடும் காளைகள், சுவாரசியமாகும் சீசன் 7

Bigg boss 7 raising hands of woman: எவ்வளவு வேலை பளு இருந்தாலும் இப்போது 24 மணி நேரமும் பிக்பாஸ் நிகழ்ச்சியை லைவில் காணும் ஆர்வம் பலருக்கும் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்த சீசனை பல பிரபலங்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அது ட்விட்டர் தளத்தில் வெளிப்படையாகவே தெரிகிறது.

அது மட்டுமல்லாமல் போட்டியாளர்களை பற்றிய தங்களுடைய கண்ணோட்டத்தை ரசிகர்கள் விமர்சனமாகவும் முன் வைக்கின்றனர். அந்த வகையில் இந்த சீசன் இதற்கு முந்தைய சீசன்களை விட படு சுவாரசியமாகத்தான் செல்கிறது.

இதற்கு முக்கிய காரணம் தற்போது பிக்பாஸ் வீட்டில் பெண்களின் கை ஓங்கி இருப்பது தான். அதிலும் குறுக்கு வழியில் செல்லும் மாயா, பூர்ணிமா ஒரு பக்கம் விறுவிறுப்பை கூட்டுகின்றனர். அவர்களை துணிந்து எதிர்க்கும் விசித்ரா, அர்ச்சனா என பலரும் நிகழ்ச்சியை சுவாரசியமாக்கி வருகின்றனர்.

தற்போது கொஞ்சம் அடக்கி வாசிக்கும் ஜோவிகா இதற்கு முன்பு வரை தன்னுடைய விளையாட்டை நேர்த்தியாக தான் கொண்டு சென்றார். இப்படி பெண் போட்டியாளர்கள் அனைவரும் நிகழ்ச்சியின் பக்க பலமாக இருக்கின்றனர். அதே சமயம் ஆண் போட்டியாளர்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக தான் செய்கின்றனர்.

ஆனாலும் பெண்கள் அளவுக்கு இல்லை என்பது தான் இப்போது பலரின் கருத்தாக இருக்கிறது. இதில் தினேஷ் தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக முன் வைக்கிறார். ஆனால் மணி, விஷ்ணு, கூல் சுரேஷ் ஆகியோர்கள் அவ்வப்போது மட்டுமே தங்கள் இருப்பை காட்டிக் கொள்கின்றனர்.

இதில் பிராவோ, விக்ரம், கானா பாலா இருக்கும் இடம் தெரியாமல் இருக்கின்றனர். அதனாலயே பெண்கள் அணி இரு பிரிவுகளாக பிரிந்து டைட்டிலை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். இது தெரியாத ஆண்கள் இப்போது டம்மி பாவா என கலாய்க்கப்பட்டு வருகின்றனர். இப்படியாக நகரும் இந்த சீசன் இனிவரும் நாட்களில் இதைவிட அதிக சூடு பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.