விஜய் டிவி நிகழ்ச்சிகளில் மிகப் பிரபலமான ஒன்று பிக் பாஸ். கிட்டத்தட்ட ஆறு சீசன்களாக டிவி நேயர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது இந்த நிகழ்ச்சி. சினிமாவில் அறிமுகமாக முயற்சி செய்பவர்கள், ஏற்கனவே அறிமுகம் ஆகி வாய்ப்பு இல்லாமல் தவித்துக் கொண்டிருப்பவர்கள், மாடலிங் துறையை சேர்ந்தவர்கள் என அனைவரும் இந்த சீசன்களில் கலந்து கொண்டனர்.
பெரும்பாலும் இந்த நிகழ்ச்சியில் பரிட்சயம் இல்லாதவர்கள் வந்தாலும் போட்டி முடிவதற்குள் அவர்களுக்கு என ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிடும். அதேபோல் நாம் வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் பார்த்த நிறைய முகங்களின் உண்மையான குணங்களை மூலம் தெரிந்து கொள்ளலாம். அதற்கேற்றார் போல் அவர்களுக்கு ஆதரவு பெருகவும் செய்யும், குறையவும் செய்யும்.
சில சீசன்களின் போட்டியாளர்கள் உள்ளே இருக்கும் வரை நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் வெளியில் வந்த பிறகு அவர்களைப் பற்றி எதிர்பாராத நிறைய விஷயங்கள் மீடியாவில் வெளிவர தொடங்கும். அதேபோன்றுதான் கடைசி சீசனில் பங்கு பெற்ற விக்ரமனுக்கு என்று பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்து வந்த வேலையில் வழக்கறிஞர் ஒருவர், விக்ரமன் தன்னை காதலித்த ஏமாற்றி விட்டதாக புகார் அளித்தார்.
அதேபோன்று ஒரு சம்பவம் தான் இப்போது நடந்திருக்கிறது. பிக் பாஸ் இன் 6 சீசன்களில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது மூன்றாவது சீசன் தான். இதில் கலந்துகொண்ட அத்தனை போட்டியாளர்களுமே ரசிக்கப்பட்டார்கள். 90களின் காலகட்டத்தில் ஹீரோவாகவும், பருத்திவீரன் படத்தில் செவ்வாழை என்னும் புகழ்பெற்ற கேரக்டரில் நடித்தவர் தான் சரவணன். இவரும் இந்த சீசனில் கலந்து கொண்டார்.
தற்போது சரவணன் மீதுதான் அவருடைய மனைவி போலீஸ் மற்றும் தமிழ்நாடு அரசிடம் புகார் அளித்திருக்கிறார். அதில் சரவணன் பிக் பாஸ் சென்று வந்ததில் இருந்தே மொத்தமாக மாறிவிட்டார் எனவும், ஸ்ரீதேவி என்னும் பெண்ணுடன் திருமணம் செய்யாமலே வாழ்ந்து வருகிறார் என்றும், இப்போது தன் சொந்த உழைப்பில் கட்டிய வீட்டை விட்டு தன்னையே வெளியேறுமாறு கொலை மிரட்டல் விடுகிறார் என்றும் புகார் அளித்திருக்கிறார்.
சரவணன் ஏற்கனவே காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், குழந்தை இல்லாத காரணத்தால் தன்னுடைய முதல் மனைவியின் சம்மதத்துடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதை அவர் பிக் பாஸில் கலந்து கொள்ளும் பொழுது தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது வேறு பெண்ணுடன் வாழ்வதும், முதல் மனைவியை கொடுமைப்படுத்துகிறார் என்று புகார் அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்திருக்கிறது.