பருத்திவீரன் படம் என்றாலே பலருக்கும் கார்த்தியை விட அதிகம் ஞாபகத்திற்கு வருவது சித்தப்பு கதாபாத்திரத்தில் நடித்த சரவணன் தான். அவருடைய நடிப்பு அந்தப் படத்தை அவ்வளவு எதார்த்தமாக இருந்தது.
பார்ப்பதற்கு விஜயகாந்த் போலவே தோற்றத்தில் இருக்கும் சேலத்தைச் சேர்ந்த சரவணன் தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில் மினிமம் கேரண்டி நடிகராக வலம் வந்தவர். பட்ஜெட் படங்களில் ஹீரோ என்றால் சரவணன் தான் என்கிற ரேஞ்சுக்கு வளர்ந்து வந்தாராம்.
சினிமாக்காரர்கள் ஒன்றுக்கு இரண்டு பொண்டாட்டி வைத்துக் கொள்வது ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் சரவணனும் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டாராம். ஆனால் அதன் பிறகுதான் அவருக்கு பிரச்சனையை ஆரம்பித்ததாம்.
இரண்டு பொண்டாட்டி என்பதால் அவர்களுக்குள் அடிக்கடி ஏதாவது ஒரு பிரச்சினையை வந்து விடுமாம். இதன் காரணமாகவே சினிமாவில் முன்னாடி போல் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறி வந்துள்ளார் சரவணன்.
அந்த நேரத்தில் மார்க்கெட்டும் சரசரவென சரிந்து சரவணனை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிட்டதாம். அடுத்த விஜயகாந்த் என்கிற ரேஞ்சுக்கு பேசப்பட்ட சரவணன் சொந்த பிரச்சனை காரணமாக மார்க்கெட் இல்லாமல் சினிமாவை விட்டு விலகி செல்ல வேண்டிய நிலைமை.

பின்னர் பருத்திவீரன் படம் கை கொடுத்தாலும் தொடர்ந்து அதே மாதிரி சில படங்களில் அதே கதாபாத்திரத்தில் நடித்தது அவருக்கு மைனஸ் ஆக அமைந்து விட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பெண்களை உரசவே பேருந்துகளில் செல்வேன் என்று சொல்லியது தமிழ் மக்களிடையே சரவணன் இப்படிப்பட்டவரா என ஒரு கெட்ட மனப்பான்மையை ஏற்படுத்தி விட்டது என்பதும் மறுக்க முடியாத ஒன்று.
இப்படிப்பட்ட சரவணன் தற்போது சேலத்தில் சினிமா ஸ்டூடியோ ஒன்றை கட்டி முடித்துள்ளாராம். இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் அவருடைய யூடியூப் சேனல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.