சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வந்த மாநாடு படத்தின் படப்பிடிப்புகள் மொத்தமும் முடிவடைந்து விட்டன. விரைவில் மாநாடு படத்திற்கான டீசர், டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதிக்கான அறிவிப்புகள் வெளிவர உள்ளது.
அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் சிம்பு மற்றும் கௌதம் மேனன் இணையும் நதிகளிலே நீராடும் சூரியன் என்ற படம் ஆரம்பமாக உள்ளது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனர் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
முதலில் முழுக்க முழுக்க காதல் கதையாக உருவான இந்த படத்தின் கதையை கேட்ட சிம்பு, பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டாராம். அதன்காரணமாக தற்போது கௌதம் மேனன் மொத்த கதையையும் மாற்றி விட்டதாக கூறுகின்றனர்.
முதலில் காதல் கதை என ஆரம்பித்த இந்த திரைப்படம் தற்போது முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக மாறிவிட்டதாம். சிம்புவும் ஆக்ஷன் கதைக்கு ஓகே சொல்லிவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் வேக வேகமாக படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
மேலும் சிம்புவுக்கு ஜோடியாக இந்த படத்தில் பாலிவுட் டாப் நடிகை கீர்த்தி சனோன் என்பவரை கொண்டுவர திட்டமிட்டுள்ளாராம் கௌதம் மேனன். கீர்த்தி சனோன் தற்போது பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பாலிவுட்டின் பிரபல நடிகையான இவர் சிம்புவுடன் ஜோடி சேர்ந்து நடித்தால் சிம்பு படத்தை ஹிந்தியில் வியாபாரம் செய்ய பெரிதும் உதவியாக இருக்கும் என கவுதம் மேனன் விரும்பியதால் தயாரிப்பு தரப்பு இந்த முடிவை எடுத்துள்ளதாம். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என தெரிகிறது.