தமிழில் முண்ணனி நடிகராக வலம் வருவர் தளபதி விஜய் இப்போது நெல்சன் இயக்கத்தில் “பீஸ்ட்”என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஹீரோயின் காமெடியன் ஸ்டண்ட் என பல்வேறு அப்டேட்டுகள் வந்தபடியே உள்ளன.
பர்ஸ்ட் லுக் பட்டையை கிளப்பிய தருணத்திலிருந்தே படம் பற்றிய எதிர்பார்ப்பு எல்லோர் மனதிலும் பற்றிக்கொண்டது. அவ்வப்போது சில செய்திகள் கிடைத்தது போலவே பாலிவுட் வரை சென்று உள்ள செய்தி கிடைத்துள்ளது.
அது என்னவெனில் தளபதியுடன் இந்தியின் புகழ்பெற்ற பாலிவுட்டின் பாட்ஷா சாருக்கான் இணைகிறாராம். ஏதோ ஒரு கெஸ்ட் ரோலில் வந்து செல்வதாக படக்குழு குறிப்பிட்டுள்ளது.
இவர் நடித்த சாம்ராட் அசோகாவில் தல அஜித்துடனும் ஹேராம் திரைப்படத்தில் கமலஹாசனுடனும் சாருக் ஏற்கனவே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கெஸ்ட் ரோலுக்கு ஆக ஷாருக்கானிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கப்போகும் படம் உறுதியாகிவிட்டது. தளபதியின் தம்பி என்பதால் அட்லீ கொடுத்த ஐடியாவில் தான் ஷாருக்கான் பீஸ்ட் படத்தில் நடிக்கிறாரா என்று குழப்பத்தில் உள்ளனர் ரசிகர்கள்.
