Ajith Kumar: வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் போகும், ஓடமும் ஒரு நாள் வண்டியில் போகும் என்று சொல்வார்கள். அந்த பழமொழிக்கு சிறந்த எடுத்துக்காட்டை தான் நடிகை ஒருவர் சொல்லி இருக்கிறார்.
முன்பெல்லாம் உலக சினிமா பொறுத்தவரைக்கும் பாலிவுட் காரர்களின் படங்கள் தான் தரமாக இருக்கும். இந்திய அளவில் ஆஸ்கார் விருது என்றாலே அது பாலிவுட் படங்களுக்குத்தான்.
தப்பி தவறி ஏதாவது ஒரு படத்தின் மூலம் தென்னிந்திய ஹீரோக்கள் அங்கே நுழைந்து விட்டால் அவ்வளவுதான்.
எவ்வளவு அசிங்கப்படுத்த முடியும் அவ்வளவையும் சிறப்பாக செய்து முடித்து விடுவார்கள். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாகி விட்டது.
தங்களால் முடிந்தவரை தென்னிந்திய ஹீரோக்கள் மற்றும் இயக்குனர்களை கொண்டாடி வருகிறார்கள்.
தென்னிந்திய நடிகர்கள் இல்லாமல் பாலிவுட் இல்லை
சமீபத்தில் ஷாருக்கான் தென்னிந்திய நடிகர்கள் சிலரின் பெயரை சொல்லி நீங்கள் நடனம் ஆடுவதை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்.
என்னால் உங்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை என்று உயர்த்தி பேசி இருக்கிறார். இதற்கான காரணத்தை தான் வெளிப்படையாக சொல்லி இருக்கிறார் ரெஜினா கசான்றா.
ரெஜினா அஜித்குமாரின் விடாமுயற்சி படத்தை முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் ரெஜினா பாலிவுட் காரர்களுக்கு இனி வேறு வழி இல்லை.
தென்னிந்திய ஹீரோக்கள் இருந்தால் தான் அவர்களுடைய அவர்களுடைய படங்கள் எல்லாம் ரசிகர்களால் பார்க்கப்படும்.
இனி பாலிவுட் படங்கள் ஓடுவதற்கு தென்னிந்திய ஹீரோக்கள் தேவை என உடைத்து பேசி இருக்கிறார்.