இளையராஜா இல்லாமல் கிடைத்த வெற்றி.. சரித்திரத்தையே மாற்றிய பாக்ஸ் ஆபிஸ் ராஜாக்கள்

Ilayaraja: இசைஞானியின் இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதனாலேயே தலைமுறை தாண்டியும் தமிழ் சினிமாவை அவர் தன்னுடைய பாடல்களால் கட்டி போட்டு வைத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் இவரால் நம்பர் ஒன் இடத்திற்கு வந்த பல ஹீரோக்களும் உண்டு.

ஏனென்றால் அந்த காலகட்டத்தில் இளையராஜா ஒரு படத்திற்கு இசையமைக்கிறார் என்றாலே வியாபாரம் பிச்சிக்கிட்டு போகுமாம். அது மட்டுமின்றி இவருடைய பாடல்களால் வெற்றி பெற்ற பல படங்களும் உண்டு. இதனாலயே பல முன்னணி ஹீரோக்கள் இவருடைய தேதிகளுக்காக காத்திருந்து படம் நடிப்பார்களாம்.

அதற்கு ரஜினி, கமல் கூட விதிவிலக்கல்ல. இவர்களுடைய பல படங்கள் இசைஞானியின் கைவண்ணத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. இப்படி ஒரு சரித்திரம் தமிழ் சினிமாவில் இருக்கிறது. ஆனால் இப்போது பாக்ஸ் ஆபிஸ் கடவுள்களாக பார்க்கப்படும் விஜய் அஜித் இருவரும் அதை மாற்றி இருக்கின்றனர்.

Also read: சூப்பர் ஸ்டார் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. உச்சி குளிர்ந்து போன நடிப்பு அரக்கன்

அதாவது இவர்கள் நடிக்க வந்த காலகட்டத்தில் சில சிரமங்களுக்கு ஆளானாலும் இப்போது டாப் ஹீரோக்களாக உயர்ந்து நிற்கின்றனர். இத்தனைக்கும் இளையராஜா இவர்களுடன் அதிக அளவில் பணிபுரிந்தது கிடையாது. ஆனாலும் இவர்கள் முன்னணி அந்தஸ்தை அடைந்தனர்.

அந்த வகையில் இசைஞானியின் துணை இல்லாமல் வெற்றி நடிகர்களாக உருவெடுத்து இருக்கின்றனர். ஏனென்றால் தேவா, ஏ ஆர் ரகுமான் தான் அஜித் விஜய் படங்களுக்கு அதிக அளவில் இசையமைத்திருக்கின்றனர். அதிலும் 90 காலகட்டத்தில் தேவா இவர்களுக்கு அதிக வெற்றி பாடல்களை கொடுத்திருக்கிறார்.

ஆக மொத்தம் ரஜினி, கமலுக்கு ஒரு இளையராஜா என்றால் விஜய், அஜித்துக்கு ஒரு தேவா. தற்போது யுவன், அனிருத் ஆகியோர் பட்டையை கிளப்பி வந்தாலும் விஜய் அஜித்தின் வெற்றிக்கு தேவா, ஏ ஆர் ரகுமானும் முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.

Also read: விஜய்யை மிஞ்ச ரஜினி நடிக்கப் போகும் 5 பிரம்மாண்ட இயக்குனர்கள்.. பட்ஜெட் 1500 கோடி, அப்படின்னா வசூல்?